ETV Bharat / state

ரூ.1,000 கோடி நிலுவைத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் - தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 7:38 PM IST

Confederation of Private Schools Association: தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 5வது மாநில மாநாடு இன்று (பிப்.25) நடைபெற்றது.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

"ரூ.1,000 கோடி நிலுவை தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்" - தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில், 5வது மாநில மாநாடு இன்று (பிப்.25) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலில், சுயநிதி பள்ளிகளுக்காக தனியாக இயக்குனரகம் அனைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், கல்வி உரிமைச் சட்டம் (RTE) தொகையினை வழங்க வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையான கல்விக் கட்டணத் தொகை ரூ.1,000 கோடியை பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதேபோல், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவைக் கலைத்து, தமிழக அரசே கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும், LKG, UKG மாணவர்களுக்கு RTE தொகையினை ரூபாய் 6,000லிருந்து 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பள்ளி வாகன ஓட்டிகளுக்கும், தாளாளர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இந்த மாநில மாநாட்டில் மாநிலத் தலைவர் ஆறுமுகம், மாநிலச் செயலாளர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், பள்ளி தாளாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "ஓராயிரம் விஜய் வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது" - நடிகர் ரஞ்சித் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.