ETV Bharat / state

ரெட் அலர்ட்: சென்னையில் மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்.. உங்க ஏரியாவுக்கு யாரு?

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகம் மற்றும் மழை தொடர்பான கோப்புப்படம்
தலைமைச் செயலகம் மற்றும் மழை தொடர்பான கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 9:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு மண்டலக் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்மந்தப்பட்ட மண்டலங்களை சேர்ந்தவர்கள், பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்தந்த மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அவர்களின் கைபேசி எண்களின் விவரம்

மண்டலம் அலுவலர்கள்கைப்பேசி எண்
1.திருவொற்றியூர்எஸ்.சமீரன், மேலாண்மை இயக்குநர் - தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்94999 56201
2.மணலிகுமரவேல் பாண்டியன், இயக்குநர் - தோட்டக்கலைத்துறை 94999 56202
3.மாதவரம்மேகநாத ரெட்டி, உறுப்பினர் செயலர் - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்94999 56203
4.தண்டையார்பேட்டை ஆர்.கண்ணன், மேலாண்மை இயக்குநர் - எல்காட் 94999 56204
5.ராயபுரம் ஜாஞ்டாம் வர்கீஸ், இயக்குநர் - குழந்தைகள் நலன்94999 56205
6.திரு.விக.நகர் பி.கணேசன், இயக்குநர் - நகர் ஊரமைப்பு இயக்கம்94999 56206
7.அம்பத்தூர் எஸ். ராமன், திட்ட இயக்குநர் - தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம்94999 56207
8.அண்ணாநகர் ஸ்ரேயா பி சிங், செயல் இயக்குநர் - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 94999 56208
9.தேனாம்பேட்டை எம்.பிரதாப் , சிறப்புத் திட்டச் செயலாளர் - தலைமைச் செயலகம்94999 56209
10.கோடம்பாக்கம்எஸ்.விசாகன், மேலாண்மை இயக்குநர் - தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்94999 56210
11.வளசரவாக்கம் ஏ.சிவஞானம், முதன்மை செயல் அலுவலர் - சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்9499956211
12. ஆலந்தூர் எஸ்.பிரபாகர், மேலாண்மை இயக்குநர் - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்94999 56212
13. அடையாறுகே.செந்தில் ராஜ், மேலாண்மை இயக்குநர் -சிப்காட்94999 56213
14. பெருங்குடி மகேஸ்வரி ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர்94999 56214
15. சோழிங்கநல்லூர்பி.உமா மகேஸ்வரி, கூடுதல் ஆணையாளர் வணிக வரித்துறை94999 56215

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.