சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் டிஜிபி ஆக சைலேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பொறுப்பை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் கூடுதலாக கவனித்துக்கொள்வார்.
கோவை மேற்கு மண்டலத்தின் புதிய ஐஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வாய், காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ் குமார் மீனா திருநெல்வேலி காவல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில மனித உரிமைகள் ஆணைய ஐஜி மகேந்தர் குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சாமுண்டீஸ்வரி பொதுப்பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ராதிகா மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி நாஜ்மூல் ஹோடா நவீன காவல்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
IPS Transfer and Posting #CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @tnpoliceoffl pic.twitter.com/ue5kcqfI8V
— TN DIPR (@TNDIPRNEWS) August 4, 2024
இதேபோன்று, ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, திருநெல்வேலி சரக டிஐஜியாகவும். திருநெல்வேலி சரக டிஐஜி ஆக இருந்த பிரவேஷ் குமார் வடசென்னை சட்டம் - ஒழுங்கு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே டிஐஜியாக அபிஷேக் தீட்ஷித்தும், ராமநாதபுரம் சரக டிஐஜியாக அபினவ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி துரை, காவல் துறை நலன் பிரிவுக்கு டிஐஜி ஆகவும், ஐபிஎஸ் அதிகாரி தேவராணி வேலூர் சரக டிஜஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி சரோஜ் குமார் தாகூர் சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் செயலராக (டிஐஜி) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு தவறான தகவல்" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Vanniyars reservation Issue