சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தின் போது கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் அமைச்சர் ராஜகண்ணப்பன் 4 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1. நீலகிரி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் 150 மலைவாழ் பழங்குடியின நபர்களுக்கு கலை நயமிக்க மண்பாண்ட பொருட்கள் தயாரிக்க வேண்டி பயிற்சி மற்றும் தென்காசி, சிவகங்கை, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் 200 நபர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக உரிய பயிற்சி ரூபாய் 45 லட்சம் செலவில் அளிக்கப்படும்.
2.வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் ஈரோடு, திருவண்ணாமலை மற்றும் கொடைக்கானல் கதரங்காடிகள் ரூ.45 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.
இதையும் படிங்க: சிறந்த பட்டு உற்பத்தியாளர்களுக்கு மாநில அளவில் ரொக்கப் பரிசு! - அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு..! - Tamil Nadu Assembly 2024
3.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் பனைப் பொருட்கள் வர்த்தக மையம் ஒன்று ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
4.தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை, கூட்டுறவு இணைய மானாமதுரை கிளையில் பனந்தூரிகை தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி 60 நாட்கள், 25 நபர்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் வழங்கப்படும்.
இதையும் படிங்க: அமைச்சர் பொறுப்பேற்று மூன்றாண்டாகியும் ஆய்வு மேற்கொள்ளவில்லையா? - சபையில் கோபப்பட்ட அவை முன்னவர்! - TN assembly sessions 2024