ETV Bharat / state

'தமிழ்ப் புதல்வன்' திட்டப் பயனாளிகள் எத்தனை லட்சம்? தமிழக அரசு அசத்தல் அப்டேட்! - tamil puthalvan scheme - TAMIL PUTHALVAN SCHEME

Tamil puthalvan scheme: 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் - கோப்புப்படம்
மாணவர்கள் - கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 6:22 PM IST

சென்னை: தமிழ்ப் புதல்வன் திட்டம் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயனடைவார்கள்.

இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் , மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்று, இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டன.

அதனை தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உரையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர், “அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயன் அடைவார்கள்.

இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்புக்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது. மாணவர்கள் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்க்கை பெறும் நிலை எழும். மாணவர்கள் உயர்கல்வித் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ளவும் தமிழ்நாட்டின் மொத்த மாணவர் , மாணவியர் சேர்க்கை விகிதம் (GER) உயர்வதற்கு வழிவகை செய்யும்.

2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதுமைப் பெண் திட்டம் போன்று மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்” இவ்வாரூ அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பி.இ., பி.டெக். படிப்பில் சேர போன் வந்தால் நம்பாதீங்க..! தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை! - bE and BTech admission fake calls

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.