ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம்! பின்னணி இதுதான்? - GOVERNOR RN RAVI DELHI VISIT - GOVERNOR RN RAVI DELHI VISIT

Governor R.N Ravi sudden visit to Delhi: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென ஒரு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆளுநர் ஆர்என் ரவி
ஆளுநர் ஆர்என் ரவி - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 2:30 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என் ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி உடன் நிறைவடைந்துவிட்டது. அதன்பின்பு ஆளுநரின் பதவிக்காலம் நீடிக்கப்படவும் இல்லை, தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநரை நியமனம் செய்யப்படவும் இல்லை. இதையடுத்து தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என் ரவி தொடர்ந்து நீடித்து வருகிறார்.

இதற்கிடையே ஆர்.என் ரவி தனது பதவிக் காலம் ஜூலை 31ஆம் தேதி நிறைவடைந்ததும், மறுநாள் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலையிலேயே விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து 4 நாட்கள் டெல்லியில் தங்கியிருந்து விட்டு சென்னை திரும்பினார். அதன்பின்பும், ஆளுநரின் பதவி நீடிப்பு குறித்த உத்தரவு டெல்லியில் இருந்து வரவில்லை.

அதையடுத்து கடந்த 19ஆம் தேதி இரண்டாவது முறையாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இம்முறை 3 நாட்கள் டெல்லியில் இருந்து விட்டு கடந்த 21ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். மீண்டும் 3வது முறையாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது 2 நாள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் 25ஆம் தேதி விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி நான்காவது முறையாக இன்று காலை 6.40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஒரு நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆர்.என்.ரவி இன்று இரவு 8.20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து மீண்டும் சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் இருந்து ஆளுநரின் பதவி நீடிப்பு குறித்து இதுவரையில் எந்தவிதமான தகவலும் வரவில்லை எனவும், தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆளுநரின் ஒரு நாள் டெல்லி பயணம் அவருடைய சொந்த வேலைக்காகச் செல்லும் பயணம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: செப்.23ல் தமிழக வெற்றிக் கழக மாநாடு! காவல் துறை அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.