ETV Bharat / state

கணவனை இழந்த பெண்கள் முதல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வரை: கால்நடை பராமரிப்புத்துறையின் புதிய அறிவிப்புகள்.! - 11 New Updates in Animal Husbandry - 11 NEW UPDATES IN ANIMAL HUSBANDRY

தமிழ்நாடு சட்டபேரவையில் கால்நடை பராமரிப்புத்துறையில் 11 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலகம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலகம் (Credit: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எக்ஸ் (x) Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 8:31 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஜூன்,22) கால்நடை பராமரிப்புத்துறையில் 11 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இங்கே பார்க்கலாம். அவற்றில் முக்கியமாக கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பண்ணை விவசாயிகள் உள்ளிட்ட பலர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன அறிவிப்புகள் என்பதை பார்க்கலாம்.

கால்நடை பராமரிப்புத்துறையில் 11 புதிய அறிவிப்புகள்:

  • ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள் என, 38 ஆயிரத்து 700 பெண் பயனாளிகளுக்கு தலா 40 நாட்டு ரக கோழிக்குஞ்சுகள் வீதம், 6 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்
  • உயர் மரபுத் திறன் கொண்ட கால்நடைகளை இனப்பெருக்கத்திற்காக வளர்ப்பதற்கும் அதிகபரப்பளவில் பசுந்தீவன பயிர்களை உற்பத்தி செய்வதற்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பண்ணை ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
  • அதிக பரப்பளவில் பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கும் உயர் மரபுத்திறன் கொண்ட கால்நடைகளை இனப்பெருக்கத்திற்காக வளர்ப்பதற்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பண்ணை ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
  • செட்டிநாடு மாவட்ட கால்நடை பண்ணையில் பசுந்தீவன உற்பத்தியை மேலும் அதிகரிக்க பயிரிடப்படாத 100 ஏக்கர் நிலப்பரப்பில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனப் பயிர்கள் ரூ.5 கோடி செலவில் பயிரிடப்பட்டு தீவன உற்பத்தி பெருக்கப்படும்
  • தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 3000 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.5 கோடி செலவில் வழங்கப்படும்
  • மாநிலத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் பொருட்டு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளின் 2000 ஏக்கர் பாசன நிலங்களில் பசுந்தீவன உற்பத்தி மேற்கொள்ளப்படும்
  • மானாவாரி சாகுபடியின் கீழ் உள்ள விவசாயிகளின் 5000 ஏக்கர் நிலங்களில் பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டு 1 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் நன் நிலங்களில் தீவன உற்பத்தி அதிகரிக்கப்படும்
  • கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவன உற்பத்திக்கான மேம்படுத்தப்பட்ட உத்திகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும்
  • ஒருங்கிணைந்த சுகாதாரத்தின் கீழ் 5 லட்சம் செல்லப்பிராணிகளுக்கு ஒரு கோடியே செலவில் 50 விழுக்காடு மானியத்தில் வெறிநாய் கடி நோய் தடுப்பூசி போடப்படும்
  • கால்நடை நிறுவனங்களில் நவீன நோய் அறியும் கருவிகளை கையாளுவதற்கு என நான் ஒரு கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஒரு கோடி ரூபாய் செலவில் அளிக்கப்படும்
  • சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு விடுதி கட்டப்படும். உள்ளிட்ட அறிவுப்புகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ரூ.75 கோடியில் ரிப்பன் கட்டத்தில் புதிய மாமன்ற கூடம்:அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.