சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பான விரிவான உரை நிகழ்த்தினார். அப்போது முக்கியமான சில அறிவிப்பை வெளியிட்டார். அதில், "கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பாதிக்கப்பட்டு குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் நிதியோடு பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
- பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாழும் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு படிக்க கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினமும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.
- பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவேறும் வரை மாத பராமரிப்பு தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணம் தொகையாக அவர்களின் பெயரின் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரணத்தில் இருந்து நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும். அவர்களது 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வட்டியுடன் அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும்.
- பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கும்.
- பெற்றோர் இருவரை அல்லது ஒருவரை இழுந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் முன்னுரிமை உடன் முதலில் வழங்கப்படும்.
- பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அரசு அல்லது அரசு நிதி பெறும் இல்லங்களிலோ விடுதியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் எதிரொலி: கடலூரில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல்!