சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அப்போது, தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் குறித்து பேச அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கருப்பு சட்டை அணிந்து வந்து முறையிட்டனர்.
தொடர்ந்து, அதிமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததாக தெரியவருகிறது. இதனிடையே, மக்கள் பிரச்சனைகளை பேசும் நேரத்தில் உங்கள் நெருக்கடியை காண்பிக்காதீர்கள் என சபாநாயகர் கூறினார்.
அதற்கு, கேள்வி நேரம் முடிந்தவுடன் அனுமதி தரப்படும் எனவும் எதிர்கட்சியினர் இவ்வாறு செய்வது ஏற்புடையது இல்லை எனவும் சபாநாயகர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கள்ளச்சாரயம் விவாகரம் குறித்து பேச அனுமதி வழங்காததை கண்டித்து அதிமுகவினர் சட்டப்பேரவையைப் புறக்கணித்தனர்.
பின்னர் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, 'அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளகுறிச்சி விவகாரத்தை கண்டித்து இன்று மீண்டும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச முற்பட்டார். எதிர்க்கட்சித்தலைவரை பேச அனுமதிக்கக் கோரி அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.
கேள்வி நேரம் முடிந்ததும் அனுமதிப்பதாக பேரவை தலைவர் தெரிவித்த நிலையில் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய பேரவை தலைவர் அப்பாவு, 'மரபுபடி கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் தருகிறேன் எனக் கூறியும்; ஏதோ நெருக்கடி காரணமாக, சட்டமன்றத்தில் இவ்வாறு அதிமுகவினர் நடந்து கொள்வதாகவும், மக்கள் பிரச்சனை பேசும் இடத்தில் உங்கள் நெருக்கடியை தீர்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
'மேலும் இந்த சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் செய்யும் செயலிலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுப்பட்டு வருவதாகவும், நாகரீகமான அரசியல்வாதிபோல் எதிர்க்கட்சித்தலைவர் செயல்பட வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு! - Illicit Liquor In Kallakurichi