திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அதிமுக வேட்பாளர் ராம எம்.கலியபெருமாளை விட 2,33,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
1. | சி.என்.அண்ணாதுரை | திமுக | 5,47,379 |
2. | எம்.கலியபெருமாள் | அதிமுக | 3,13,448 |
3. | ஏ.அஸ்வதாமன் | பாஜக | 1,56,650 |
4. | ரமேஷ்பாபு | நாதக | 83,869 |
- திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், 3.13 மணி வாக்கு எண்ணிக்கையின் படி, திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 237787 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதேபோல, அதிமுக வேட்பாளர் எம்.கலியபெருமாள் 131426 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் ஏ.அஸ்வத்தாமன் 69864 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 106361 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.
சிவப்பெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருவண்ணாமலை, ஆன்மிக சிறப்புமிக்க இடமாக திகழ்கிறது. கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது இத்தொகுதி. குறிப்பாக ஜவ்வாது மலை, ஏலகிரி மலைகளின் சில பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பெருமளவு கிராமங்களைக் கொண்ட தொகுதியாகவும் உள்ளது. இங்கு, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் அண்ணாதுரை, அதிமுக சார்பாக கலியபெருமாள், பாஜக சார்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரா.ரமேஷ்பாபு ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இத்தேர்தலைப் பொறுத்தவரையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுகவுக்கு செல்வாக்கு இருப்பதாக தெரிந்தாலும், அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கும் இங்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. எனவே இம்முறை இங்கு திமுக, அதிமுக, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
2019 தேர்தலில் வென்றது யார்?: திமுகவை சேர்ந்த சி.என்.அண்ணாதுரை 6,66,272 வாக்குகளும், அதிமுகவை சேர்ந்த எஸ்.எஸ்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3,62,085 வாக்குகளும் அள்ளினர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆர்.ரமேஷ்பாபு 27,503 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த ஆர்.அருள் 14,654 வாக்குகளும் பெற்றனர். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,04,187 அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.