திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளான தீத்தாண்டபட்டு, நாச்சிப்பட்டு, கொட்டகுளம், கரியமங்கலம் பகுதியில், இரவு நேரங்களில் மணல் கொள்ளை வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையோடு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், நேற்று இரவும், கரியமங்கலம் செய்யாற்றில் மணல் டிப்பர் லாரியில் கடத்துவதற்காக குவியல் குவியலாக மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த செங்கம் வட்டாட்சியர் முருகன், தனது வாகனத்தில் ஆற்றிக்கேச் சென்று மணல் கடத்தல் கும்பலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகவலறிந்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வட்டாட்சியர் போனில், ‘ஜேசிபியை எடுத்துட்டு வந்து உடனே மணலை கலைத்து விடுங்க’ என்று கூறிவிட்டு வண்டிய எடுங்கடா' என்று மணலை கலைக்காமலே சென்று விட்டார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: “இடம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை” - கூடங்குளம் சி பிரிவு தேர்வு தொடர்பாக அப்பாவு கடிதம்!