ETV Bharat / state

பல்லடம் மூவர் படுகொலை வழக்கு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர அதிமுக எம்.எல்.ஏ கடிதம்.. - TIRUPUR PALLADAM MURDER CASE

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில் இது வரை போலீசார் குற்றிவாளியை கண்டறியாத நிலையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர பல்லடம் எம்.எல்.ஏ ஆனந்தன் சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

செந்தில்குமார் குடும்பம் மற்றும் போலீசார் (கோப்புப் படம்)
செந்தில்குமார் குடும்பம் மற்றும் போலீசார் (கோப்புப் படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 1:13 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிச.9) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த சம்பவம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர பல்லடம் அதிமுக எம்எல்ஏ, எம்.எஸ்.எம். ஆனந்தன் சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை அடையாளம் தெரியாத கும்பல் கடந்த நவ.28ம் தேதி இரவு கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்ற கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில் 14 தனிப்படையினர் இந்த சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தனிப்படை அமைத்து தீவிர விசாரணை: இந்த விசாரணையில், குடும்ப பிரச்சினையோ, முன்விரோதமோ கொலைக்கான காரணம் இல்லை என போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் கொலையாளிகள் எந்த சிசிடிவி கேமராவிலாவது பதிவாகி இருக்கலாம் என்பதால் காங்கயம் வரை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், நகைக்கடைகள் மற்றும் மதுபானக் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை என சகலத்தையும் போலீசார் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல், கொலை நடந்த நாளில் அந்த பகுதியில் உலவியவர்களின் செல்போன் விபரங்கள் குறித்தும், தகவல்களை சேகரித்தனர். மேலும் சேமலைக்கவுண்டம்பாளையத்தை சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை அலசி ஆராய்ந்து விட்டனர். 800 பேருக்கும் மேல் விசாரித்து ஆவணப்படுத்தியும் விட்டனர்.

இதையும் படிங்க: "திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரம்; சீமான் பெரிதுபடுத்த வேண்டாம்" - அண்ணாமலை கருத்து!

சம்பவ இடத்தில் கிடைக்கிற தடயங்கள், பொருட்கள் என ஒன்று விடாமல் சேகரித்தனர். பாதி உறிஞ்சிவிட்டு போடப்பட்ட சிகரெட் துண்டு, காலி குவார்ட்டர் பாட்டில் என ஒன்று விடாமல் தேடி எடுத்து ஆராய்ந்தனர். இந்நிலையில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்களாகவே இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். புலம்பெயர் வடமாநிலத்தவர்களான பெட்ஷீட் விற்பவர்கள், ஆட்டுக்கல் உள்ளிட்ட வடமாநில தெரு வியாபாரிகளின் கைரேகையை சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.

ஐ-போன் மட்டுமே ஆதாரம்: இது வரை இந்த வழக்கு குறித்து சிறிய துப்பும் கிடைகாததால் விசாரணை ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறது. கடைசியாக போலீசாரின் விசாரணைக்கு துடுப்பு சீட்டாக இருப்பது, கொலையாளிகள் திருடிக்கொண்டு போன ஐ-போன் தான். அதில் இருந்த சிம் கார்டை கொலையாளிகள் தூக்கி வீசிவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ள நிலையில் அதை எப்போது ஸ்விட்ச் ஆன் செய்வார்கள் என போலீசார் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் சாமிநாதன் கொலை நடந்த வீட்டுக்கு சென்றபோது, கொலையான செந்தில்குமாரின் மனைவி, அமைச்சரிடம் வேதனையுடன் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிய வீடியோ காட்சிகள் வைரலாகியது. மேலும் பல்லடம் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் இந்த சம்பவம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.