திருப்பூர்: திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை விட 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | சுப்பராயன் | சிபிஐ | 4,72,739 |
2 | அருணாச்சலம் | அதிமுக | 3,46,811 |
3 | முருகானந்தம் | பாஜக | 1,85,322 |
4 | சீதாலட்சுமி | நாதக | 95,726 |
- திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 3,74,989 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 2,73,824 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 1,46,966 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி 75,111 வாக்குகளும் பெற்றுள்ளனர். திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை விட 1,01,165 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். - 04.58 PM நிலவரம்.
- திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 2,76,815 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 2,05,105 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 1,06,470 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி 55,627 வாக்குகளும் பெற்றுள்ளனர். திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை விட 71,710 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். - 03.31 PM நிலவரம்.
- திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 1,41,203 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 1,05,089 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 55,424 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி 28,175 வாக்குகளும் பெற்றுள்ளனர். திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை விட 36,114 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். - 12.47 PM நிலவரம்.
- திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் முன்னிலையில் உள்ளார். - 10.24 AM
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் கே.சுப்பராயன், அதிமுக சார்பில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் அருணாச்சலம், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.
இவர்களில், கடந்தமுறை வெற்றிபெற்ற வேட்பாளர் கே.சுப்பராயன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் அருணாச்சலம் மீண்டும் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 தேர்தலில் மொத்தம் 11,35,998 (70.62%) சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. முன்னதாக, 2019 தேர்தலில் 11,19,584 (76.6 %) வாக்குகள் பதிவாகின.
2019 தேர்தல் நிலவரம் என்ன?: கடந்த 2019 தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 5,08,725 வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தன் 4,15, 357 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த சந்திரகுமார் 64 ,657 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட செல்வம் 43,816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஜெகநாதன் 42,189 வாக்குகளும் வாங்கியிருந்தனர். இத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 93,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: திருப்பூரை திரும்பவும் கைப்பற்றுமா இந்தியா கூட்டணி? அடிச்சுத் தூக்குமா அதிமுக? - LOK SABHA ELECTION 2024