திண்டுக்கல்: திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக அனுப்பப்பட்ட நெயில் விலங்கு கொழுப்பு இருந்ததாக மும்பை ஆய்வு நிறுவனம் வெளியிட்டதை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டைரி ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த திருப்பதி லட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: குலசை அம்மனுக்கு சுமார் அரை கோடி ரூபாய் வருவாய்!
இந்நிலையில் இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருப்பதியைச் சேர்ந்த 11 காவல்துறையினர் விசாரணைக்காக திண்டுக்கல் ஏ.ஆர் நிறுவனத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஏ.ஆர் நிறுவனத்தில் உள்ளே உள்ள ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.