ETV Bharat / state

“கள்ளச்சாராயத்திற்கு 10 லட்சம் வழங்கும் அரசு பருப்பு பாமாயில் சரியாக வழங்குவதில்லை” - பொதுமக்கள் சரமாரி கேள்வி! - gram sabha meeting

Gram Sabha Meeting: கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் அரசு ஏழை, எளிய கிராம மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் சரியாக வழங்குவதில்லை என கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிராம சபா கூட்டத்தில் கேள்வி எழுப்பிய நபர்
கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய நபர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 7:49 PM IST

Updated : Jul 2, 2024, 8:05 PM IST

திருப்பத்தூர்: ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளகுட்டை, நிம்மியம்பட்டு, ஜாப்ராபத் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைஞர் கனவு இல்லத் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றது.

வெள்ளகுட்டை கிராம சபா கூட்டம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில், வெள்ளகுட்டை கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் கலந்துகொண்டு கலைஞர் கனவு இல்லத்தின் திட்டங்கள் குறித்து கிராம மக்கள் மத்தியில் விளக்கமளித்தனர்.

பின்னர், கூட்டத்திற்கு வந்திருந்த வெள்ளகுட்டை கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பேசுகையில், “கிராமத்தில் தலைவர், வார்டு உறுப்பினர் என அனைவரும் இருந்தும் இந்த கிராமத்தில் வளர்ச்சி இல்லை. கிராம சபா கூட்டத்திற்கு, கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பதில்லை. பேரளவுக்கு 4 துண்டு பிரசுரங்கள் மட்டும் அச்சடிக்கப்பட்டு வருகிறது” என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கிறீர்கள். அவர்கள் குடும்ப நலனை மட்டும் பார்க்கும் நீங்கள், ஏழை, எளிய கிராம மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை சரியாக வழங்குவதில்லை. கிராம மக்களுக்கு எந்த உதவிகளும் செய்யாமல் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் விடியல் ஆட்சி என்று கூறி, மக்களை பட்டினி போட்டு சாவடிக்கிரீர்கள்?” என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து ஊராட்சி நிர்வாகத்திடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டர்.

அதற்கு பதிலளித்த ஊராட்சி நிர்வாகத்தினர், “அடுத்த முறை அதிகமாக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்குகிறோம்” என்று கூறினர். இதனையடுத்து, கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கிராம சபை கூட்டம் முடிக்கப்பட்டது. நான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் வழங்காமல் ஏன் அவசர அவசரமாக கூட்டத்தை முடிக்கிறீர்கள் என்று கூறி மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: "மத்திய அரசு மைனாரிட்டி அரசு அல்ல; பலமான அரசு" - தமிழிசை செளந்தரராஜன் கருத்து!

Last Updated : Jul 2, 2024, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.