ETV Bharat / state

"என் ஆளுங்க தான் ஆனால் பணம் என்னுடையது இல்லை"- நயினார் நாகேந்திரன் கூறுவது என்ன? - Nainar Nagendran

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில், தேர்தல் பறக்கும் படையினர் 4 கோடி ரூபாயை பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில், அரசியல் சூழ்ச்சி செய்து தன்னுடைய பெயர் இணைக்கப் பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran on 4 crore seized issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 3:17 PM IST

சென்னை: தமிழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்தவகையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திச் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல முயன்ற 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மேலும், பணத்தை கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க நயிநார் நாகேந்திரன், அவரது உறவினர்கள், அவரது அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அளிக்கப்பட்டது.

அந்தவகையில், ஏப்ரல் 22ஆம் தேதி நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆஜாராக இருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தரப்பில் 10 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. அதனை அடுத்து, மே 2ஆம் தேதி ஆஜராகும் படி அவருக்கு இரண்டாவது முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய அவரது உறவினர் முருகன் என்பவரும், அலுவலகத்தில் பணிபுரியும் ஜெய்சங்கர் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோரும் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான காமலாலய்த்திற்கு வந்திருந்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி, யாரோ எங்கேயே 4 கோடி ரூபாய் கொண்டு சென்றுள்ளனர். அதில் என் பேரையும் இணைக்க முயற்சி செய்கின்றனர்.

தேர்தல் சமயத்தில் தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாயைக்கு மேல் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது. ஆனால், இந்த 4 கோடி ரூபாயை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறார்கள் என தெரியவில்லை. சென்னையில் இருந்து ரயிலில் பணம் கொண்டு சென்றவர்கள் என்னுடைய உறவினர்கள் தான். காவல் நிலையத்தில் அவர்களை மிரட்டி கூட வாக்குமூலம் வாங்கி இருக்கலாம். காவல்துறையின் சம்மனுக்கு மே 2ஆம் தேதிக்கு முன்னதாகக் கூட ஆஜராகி விளக்கம் அளிப்பேன்" எனக் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.