ETV Bharat / state

மணிரத்னம் கொடுத்த மாஸ் அப்டேட்; களத்தில் இறங்கிய கமல்ஹாசன்.. - Thug Life movie update

Thug Life Movie: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ’தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Thug Life
தக் லைஃப்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 5:13 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாகப் பொன்னியின் செல்வன் நாவல் படமாக எடுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக வெளியானது.‌ அப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மெகா கூட்டணியில் கமல் இணைந்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் தலைப்பு Thug Life என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ், மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், அன்பறிவு சண்டைக் காட்சிகளையும் கையாள்கின்றனர். கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி, நாயகன் படத்திற்குப் பிறகு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மணிரத்னம் மல்ட்டி ஸ்டார் படங்களை இயக்கவுள்ளார். இது கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது என்கிறார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (ஜன.24) முதல் தொடங்குவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், அடுத்தடுத்து 'தக் லைஃப்' படத்தின் மிரட்டலான அப்டேட்கள் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. அதில் கமலின் தோற்றம் மற்றும் வசன உச்சரிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருந்த கமல்ஹாசன் திடீரென மணிரத்னம் படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் அடுத்து இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

இதையும் படிங்க: Oscars 2024: 13 பிரிவுகளில் பரிந்துரை! எலைட்டை கோட்டைவிட்ட ஓபன்ஹெய்மர்! அது என்ன எலைட் பிரிவு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.