ETV Bharat / state

நண்பனின் இல்ல நிகழ்வுக்கு சென்ற இடத்தில் சோகம்.. நெல்லை தாமிரபரணி கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு! - 3 students died in tirunelveli

திருநெல்வேலி அருகே வெள்ள நீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்கியவர்களை மீட்கும் தீயணைப்புத் துறையினர்
நீரில் மூழ்கியவர்களை மீட்கும் தீயணைப்புத் துறையினர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 7:01 PM IST

திருநெல்வேலி: நண்பன் இல்ல கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்குச் சென்ற நிலையில், வெள்ள நீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், நெல்லை ஜோதிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரது மகன் அருண்குமார் (17), டக்கர்மார்புரத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவரது மகன் நிகில் (17), கொக்கங்கந்தான் பாறையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மகன் ஆண்ட்ரூஸ் (17) ஆகிய மூன்று பேரும் ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.

இவர்கள் மூன்று பேரும், இவர்களது நண்பரது இல்ல கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகூர்பட்டி என்ற கிராமத்திற்குச் சென்றுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, மாணவர்கள் ஆறு பேர் இணைந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வெள்ள நீர் கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் மீட்பு.. தமிழகம் திரும்புவது எப்போது?

வெள்ள நீர் கால்வாயில் மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஆண்ட்ரூஸ், அருண்குமார், நிகில் ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் அவர்களைக் காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளனர். தொடர்ந்து, இது குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை, சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் மற்றும் முன்னீர்பள்ளம் போலீசார், தண்ணீரில் மூழ்கிய ஆண்ட்ரூஸ் மற்றும் அருண்குமார் ஆகிய இரண்டு பேரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு நிக்கிலை சடலமாக மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, இறந்த 3 மாணவர்களின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.