ETV Bharat / state

“தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கூடாது” - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை செனட் கூட்டத்தில் தீர்மானம்! - MS UNIVERSITY SENATE MEETING - MS UNIVERSITY SENATE MEETING

MS UNIVERSITY SENATE MEETING: தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு எந்த நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என்றும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாட்டில் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

MS UNIVERSITY SENATE MEETING
MS UNIVERSITY SENATE MEETING (CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 4:49 PM IST

திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 45வது ஆட்சிப் பேரவை கூட்டம் (செனட்) பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தலைமையில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துணைவேந்தர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் பதிலளித்தனர்.

இந்த ஆட்சிப் பேரவை கூட்டத்தில் முக்கியமான மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுந்த ஊதியம், பணி பாதுகாப்பு தொடர்பான சட்டப் பாதுகாப்பு தமிழ்நாடு அரசு கேரளாவை போன்று நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு எவ்விதமான நுழைவுத் தேர்வும் நடத்தக்கூடாது என்றும், புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை நிறுத்தி வைத்து புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட மூன்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாட்டில் அனுமதி அளித்தால் அவை அரசு நிதி உதவியில் இயங்கும் மாநில பல்கலைக்கழகங்களை கபளீகரம் செய்துவிடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த ஆட்சிப் பேரவை கூட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் அதிக அளவிலான கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் பேரவை உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதேபோன்று, மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவது மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக வேலைக்குச் செல்வதற்கும் உயர்கல்வியில் சேர்வதற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். அவற்றை சரி செய்ய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சி பேரவை கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு; திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்! - DMK LEGAL WING PROTEST

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.