தேனி: சின்னமனூர் அடுத்த சொக்கநாதபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி செவத்தி வீரன்(60), அவரது மனைவி ஒச்சம்மாள்(55), மகன் ராஜேஷ்(33) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் இன்று காலை அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
முன்னதாக, இன்று அதிகாலை நீண்ட நேரமாக இவர்களின் வீடு திறக்கப்படாததை அடுத்து, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது மூவரும் தற்கொலை செய்து இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்ததுள்ளது. பின்னர், அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளி செவத்தி வீரன் உட்பட மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனையில், மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு சுற்றுலா மோசடி; கொடைக்கானலில் 2 பெண்கள் உள்பட 7 பேர் கைதானதன் பின்னணி என்ன?
மேலும், இதுகுறித்து சின்னமனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவர் மூவரும் ஏதேனும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைப் பெண் காவலர் தற்கொலை!