ETV Bharat / state

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயம்; தேடும் பணியில் கடலோர காவல் படை! - FISHERMEN MISSING

திருச்செந்தூரில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 3:10 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூரில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில், கடலோர காவல் படையினர் ரோந்து படகு மூலமாக மணப்பாடு கடல் பகுதியில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அமலிநகர் மீனவர் கிராமம் உள்ளது. இந்த மீனவ கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், அமலிநகரில் கடந்த வருடம் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையின் அடிப்படையில், ரூ.58 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தற்போது நாடைபெற்று வருகிறது.

இதில், தூண்டில் வளைவு ஒருபுறம் மட்டும் அமைக்கப்பட்டுதாக கூறப்படுகிறது. இதனால், மற்றொருபுறமும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் கடந்த 25 தினங்களுக்கும் மேலாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த 2 தினங்களுக்கு முன்பு கடலுக்குள் இறங்கி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அணைகளில் இருந்து தொடர்ச்சியாக நீர் திறப்பு!

தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 12) வியாழக்கிழமை, போராட்டத்தில் ஈட்டுபட்டவர்களுக்கு உணவு சமைப்பதற்காக அமலிநகரை சேர்ந்த ரமேஷ், அஜய், ரிஜெய் என்ற மூன்று மீனவர்கள் மட்டும் மீன்பிடிப்பதற்காக, ரமேஷின் சொந்த பாய் மரப் படகில் அமலிநகரிலிருந்து கடலுக்கு சென்றுள்ளனர்.

மூன்று மீனவர்கள் மாயம்:

காலை 10 மணியளவில் கடலுக்குள் சென்றவர்கள் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்த விவரத்தை, தூத்துக்குடியில் இருந்து ஊருக்கு திரும்பிய மீனவர்களிடம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அமலிநகரைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர், 10 நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தேடும் பணியில் இருந்த மீனவர்கள் கரைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து கடலோர பாதுகாப்பு படையினருக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து படகு மூலம் காணாமல் போன 3 மீனவர்களை, மணப்பாடு கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் உள்பட மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமான சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.