ETV Bharat / state

பாத யாத்திரையின்போது பரிதாபம்.. லாரி மோதி மூன்று பேர் பலி..! தென்காசி அருகே சோகம்! - TENKASI DEVOTEES LORRY ACCIDENT - TENKASI DEVOTEES LORRY ACCIDENT

devotees died in lorry accident in tenkasi: சங்கரன்கோவில் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த ஆண்கள் இருவர், பறிமுதல் செய்யப்பட்ட லாரி
விபத்தில் உயிரிழந்த ஆண்கள் இருவர், பறிமுதல் செய்யப்பட்ட லாரி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 11:43 AM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீத நல்லூர் பகுதியைச் கிராமத்தை சேர்ந்த முருகன் (45), மகேஷ்(35), பவுன்ராஜ்(45) ஆகியோர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50பேர் கொண்ட குழுவாக சங்கரன்கோவிலில் இருந்து பாதை யாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர்.

இந்த நிலையில், சாத்தூர் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பாதயாத்திரையாக இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது என். வெங்கடேஸ்வரபுரம் விலக்கு அருகே திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி, பாதயாத்திரை சென்ற குழுவினர் மீது மோதியது. இதில் முருகன், மகேஷ், பவுன்ராஜ் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திருநெல்வேலி தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறப்பு எஸ்ஐ மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. மகளுக்கு லவ் டார்ச்சர் கொடுத்த வாலிபர் துணிகரம்.. சீர்காழி ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.