ETV Bharat / state

"லிப்ட் கொடுத்தது ஒரு குத்தமா?" - பைக்கை திருட முயற்சி செய்த சிறுவன் உள்பட மூவர் கைது! - Lift robber attempt - LIFT ROBBER ATTEMPT

Bike theft in Kodaikanal: கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரைத் தாக்கி, அதனை திருட முயன்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Bike Theft In Kodaikanal
Bike Theft In Kodaikanal
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 10:09 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் பெருமாள்மலைப் பகுதியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள கொடைக்கானலுக்கு, தனது பைக்கில் சென்று பணியை முடித்துவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மலைச் சாலையில், செண்பகனூர் பிரிவு அருகே மூன்று இளைஞர்கள் அவசரமாகப் போக வேண்டும் என்று லிப்ட் கேட்டு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள நுழைவாயில் சோதனைச் சாவடியில் இறங்கி விடுகிறோம் என்று கூறி உள்ளனர். இந்நிலையில், ஒரே பைக்கில் மொத்தம் நான்கு பேர் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது நுழைவாயில் சோதனைச் சாவடிக்கு முன்பே, மூன்று இளைஞர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியைக் கொண்டு முனியாண்டியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். உடனே சுதாரித்த முனியாண்டி, இருசக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு சாலையில் சென்ற வாகனத்தில் உதவி கேட்டுள்ளார்.

அங்கு வந்த வாகன ஓட்டிகள் இறங்கி உதவிய போது, வாகன ஓட்டிகளைப் பார்த்து மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதில், முனியாண்டிக்கு தலையில் வெட்டுக்காயம் பலமாக ஏற்பட்டதால், அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த இளைஞர்கள் நடந்து சென்று பெருமாள்மலை பகுதியிலிருந்து பேருந்தில் ஏறி, வத்தலக்குண்டு நோக்கி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கெங்குவார்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் மூன்று இளைஞர்களையும் பிடித்து, கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மூவரும் மதுரை திடீர் நகரைச் சேர்ந்த சிவக்கார்த்திகேயன் (20), சங்கரேஸ்வரன் (19) மற்றும் 15 வயதுள்ள சிறுவன் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்று இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்லத் திட்டமிட்டதாகவும், 15 வயதுள்ள சிறுவன் முனியாண்டியின் தலையில் தாக்கியதாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன், சங்கரேஸ்வரன் உள்ளிட்ட இருவர்கள் மீதும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரியாதவர்கள் லிஃப்ட் கேட்டால் யாரும் தர வேண்டாம் என போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.4 கோடி விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு எதிரான மனு தள்ளுபடி! - NAINAR NAGENDRAN CASE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.