ETV Bharat / state

தஞ்சையில் மெகா வேட்டை... லாரியில் 330 கிலோ கஞ்சா கடத்தல்.. மாஸ்டர் பிளானை தவிடுபொடியாக்கிய தனிப்படை! - GANJA SMUGGLING IN TRUCK

தஞ்சை பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தி வரப்பட்ட 330 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

லாரியில் வைத்து கஞ்சா கடத்தல்
லாரியில் வைத்து கஞ்சா கடத்தல் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 11:45 AM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படையினர் பேராவூரணி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேற்று அதிகாலை பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு பகுதியை நோக்கி சென்ற ஒரு லாரியை பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் தனிப்படையினர் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

330 கிலோ கஞ்சா

அப்போது அந்த லாரியில் ஒரு ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையை திறந்து சோதனை செய்தபோது, அதில் 330 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. அத்துடன், அந்த லாரியை பின்தொடர்ந்து சொகுசு காரில் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு கூடுதல் எஸ்பி சஹனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் பகுதியை சேர்ந்த பெரமராஜ் (34) என்பதும், இந்த கஞ்சா கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த பேராவூரணி அருகே உள்ள காரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (44), கஞ்சாவை பதுக்கி வைக்க உதவியாக அம்மணிசத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) என்பதும் தெரிய வந்தது.

இதையும் படிங்க: மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்!

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையா (52) என்பவர், இவர்களை இயக்கியதும் இந்த கஞ்சா கடத்தலின் முக்கிய தலை கருப்பையா என்பதும் தெரிய வந்தது.

மேலும், லாரியில் கடத்திவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த தகவலும் போலீசார் விசாரணையில் அம்பலமானது. தொடர்ந்து இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்த 3 பைபர் படகுகளையும், சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து பெரமராஜ் லாரியில் ஏற்றி கொண்டு வந்ததும், முடச்சிக் காடு அருகே பாலம் ஒன்றில் லாரியை நிறுத்தி, அண்ணாதுரைக்கு சொந்தமான காரில் ஏற்றி அங்குள்ள தென்னந்தோப்பில் பதுக்கி வைத்து, இலங்கையில் இருந்து தகவல் கிடைத்ததும், 3 படகுகளில் கடத்துவதற்கு முயற்சி செய்து வந்துள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பிடிபட்ட 3 பேரையும் போலீசார் பேராவூரணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், இது தொடர்பாக 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள முக்கிய நபரான கருப்பையாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.