தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று (புதன்கிழமை) மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் முகாம் நடைபெற்றது.
இதற்கு துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட மாநகராட்சி ஜெகன் பெரியசாமி பேசியதாவது, “தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2023-24ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றியதாக குறிப்பிட்டார்.
மேலும், சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதனை பாராட்டும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் 2வது சிறந்த மாநகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.
நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விருதினை வழங்குகிறார். இவ்விருதை மேயர் ஆகிய நானும், ஆணையரும் இணைந்து பெற்றுக் கொள்கிறோம். தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக இதுவரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பெறப்பட்ட 663 மனுக்களில் 510 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று மேயர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் டாக்டர் வினோத் ராஜா, மண்டல ஆணையர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'புல்புல்' குருவிக் குஞ்சுகளுக்கு தந்தையாக மாறிய பழ வியாபாரி.. நெல்லையில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!