ETV Bharat / state

கே.எப்.சி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை பாயும்.. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்! - THOOTHUKUDI KFC CHICKEN ISSUE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 7:47 AM IST

THOOTHUKUDI KFC CHICKEN ISSUE: தூத்துக்குடியில் காலாவதியான எண்ணெய்யை தடை செய்யப்பட்ட சேர்மத்தைக் கொண்டு பதப்படுத்தி, உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த கே.எப்.சி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாரியப்பன்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாரியப்பன் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர் பகுதியில், தமிழ்ச் சாலையில் உள்ள வேலவன் மார்க்கெட் வளாகத்தில் கே.எப்.சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்றைய முன்தினம் திடீர் ஆய்வு கொண்டனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாரியப்பன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த ஆய்வின் போது, உணவு எண்ணெய்க்கு பயன்படுத்த அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிகேட்-சிந்தடிக் (Magnesium silicate - synthetic) என்ற உணவு சேர்மத்தை, ஏற்கனவே பயன்படுத்தியதும், அதனை மீதமாகி அப்புறப்படுத்த வேண்டிய பழைய உணவு எண்ணெய்யைத் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.

எனவே, அந்த உணவகத்திலிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் - சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதைப் பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டது. அது மட்டுமின்றி முன் தயாரிப்பு செய்து, 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த, 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இந்நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கூறுகையில், "வேலவன் மார்கெட்டில் உள்ள கேஎஃப்சி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது உறை நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய சிக்கனை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 12 மணி நேரத்திற்கு பின்பும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

எண்ணெய்யை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை திரும்ப பயன்படுத்தாமல் பயோ டீசல் தயாரிப்புக்கு அனுப்பி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கேஎஃப்சி நிறுவனத்தில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை திரும்ப பயன்படுத்துவதற்கு ஏதுவாக மெக்னீசியம் சிலிகேட் என்ற உணவு சேர்மத்தினை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், மெக்னீசியம் சிலிகேட்டை சில பொருட்களில் பயன்படுத்த மட்டுமே FSSAI அனுமதி அளித்துள்ளது. பழைய எண்ணெய்யை தூய்மைபடுத்த அனுமதி கிடையாது. கேஎஃப்சி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். FSSAIஇன் கீழ் ஒரு முறை கொதிக்கவிட்டு ஆற வைத்த எண்ணெய்யை பயன்படுத்தக்கூடாது. எண்ணெய்யை திரும்ப பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்; JSW உடன் முக்கிய ஒப்பந்தம்! - Thoothukudi VOC Port

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.