ETV Bharat / state

தருமபுரம் ஆதீனத்தில் யானை மீது திருமுறை வீதியுலா! 50 ஆண்டுகளுக்குப் பின் பூரண கும்ப மரியாதையுடன் அரங்கேற்றம் - Dharmapuram Adheenam - DHARMAPURAM ADHEENAM

Dharmapuram Adheenam: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் யானை மீது திருமுறை வீதியுலா உற்சவம் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் திருமுறை வீதியுலா உற்சவம்
தருமபுரம் ஆதீனம் திருமுறை வீதியுலா உற்சவம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 11:52 AM IST

தருமபுரம் ஆதீனம் திருமுறை வீதியுலா உற்சவ காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் வைகாசி மாத பெருவிழா 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருக்கோயில்களில் 10 நாட்கள் நடத்தப்படும் உற்சவங்களில் நான்காம் நாள் திருவிழாவாக திருமுறைகளை வீதி உலா எடுத்துச் செல்வது வழக்கம். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் 5 யானைகளின் மீதேறி திருமுறை வீதியுலா நடைபெற்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

அதன்பின்னர், சில காரணங்களால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. நடப்பாண்டு ஞானபுரீஸ்வரர் பெருவிழா ஞானபுரீசுவரர் கோயிலில் மே 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் நான்காம் நாள் திருவிழாவான யானை மீதேறி திருமுறை வீதியுலா நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்டது.

இதையொட்டி, ஆதீன திருமடத்திலிருந்து தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யானையின் மீது திருமுறைகளை ஏற்றி, தருமபுரம் ஆதீன தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறைகளை வாசித்தவாறு செல்ல, ஆதீனத்தின் நான்கு வீதிகளின் வழியே திருவீதியுலா நடைபெற்றது.

ஆதீனத்தின் மேற்கு வாசலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், திருமுறைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வீதி உலாவில் வீடுகள்தோறும் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

இதையும் படிங்க: வெகுவிமரிசையாக நடைபெற்ற கும்பகோணம் மருத்துவக்குடி திரௌபதியம்மன் தூக்குத் தேர் திருவிழா! - Kumbakonam Temple Festival

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.