ETV Bharat / state

வேலூர் விஐடியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு! - THIRUKKURAL COMPETITION 2024

விஐடி போபால் வளாகம் சார்பில் வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 8:28 PM IST

வேலூர்: விஐடி போபால் வளாகம் சார்பில், வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு பாராட்டும் விழா, விஐடி வேலுார் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவின்போது, விஐடி வேந்தர் கோ.விசுவநாதனின் பிறந்தநாள் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், குழு உறுப்பினர் ரமணி சங்கர், உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் என்று ஏராளமானோர் திரண்டு வேந்தருக்கு பிறந்தாள் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இனி ஆன்டிபயாட்டிக் வேலைசெய்யாது? சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கி சென்னை ஐஐடி!

அதோடு விஐடி வேலுார் வளாகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து தங்களின் ஒருநாள் ஊதியமான ரூ.94 லட்சம், போபால் வளாக ஊழியர்கள் ரூ.10 லட்சம் என்று ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை, அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு வழங்கினர்.

இதையடுத்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாவட்டம் வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு, முதல் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500, 2வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3வது பரிசாக ரூ.2 ஆயிரம் என்று மொத்தம் 24 பேருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வழங்கினார். விழாவில் 8 மாவட்டங்களின் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.