ETV Bharat / state

80 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்! ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்! - TIRUCHENDUR SEA

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பாக உள்ள கடல் 80 அடி அளவிற்கு உள்வாங்கியது. கடல் உள்வாங்கிய ஆபத்தை உணராத பொதுமக்கள் செல்பி எடுத்ததால், காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

கடல் உள்வாங்கிய பகுதியில் நின்று செல்ஃபி எடுக்கும் மக்கள்
கடல் உள்வாங்கிய பகுதியில் நின்று செல்ஃபி எடுக்கும் மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 10:48 PM IST

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் சுவாமியை தரிசனம் செய்வதற்காகவும் பக்தர்கள் வருகை தருவர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், கடலின் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நவ 29ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையில் திருச்செந்தூரில் காலை முதலே கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும், மதியத்திற்கு மேல் திருச்செந்தூர் பகுதியில் பரவலான சாரல் மழையும் பெய்து வந்தது.

இதையும் படிங்க : பாம்பன் பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பரிந்துரை!

இந்த நிலையில் தற்போது சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால், நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அதன்மேல் நின்றபடி ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்பி எடுத்தனர். இதனைப்பார்த்த காவல்துறையினர் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி எச்சரித்து அனுப்பினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.