ETV Bharat / state

அடுத்த 7 நாட்களுக்கு குடையை ரெடியா வையுங்க.. வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு! - TN weather update - TN WEATHER UPDATE

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 3:56 PM IST

சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால், புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 7 செ.மீ மழையும், தேனி போடிநாயக்கனூர், நெல்லை மாஞ்சோலை, மதுரை சிட்டம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. தென் தமிழகத்தில் இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.0 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 39.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் 31 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை: தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, ஏப்.13 அன்று தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.14: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.15: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.16 மற்றும் ஏப்.17: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.18 மற்றும் ஏப்.19: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஈரப்பதம்: இன்று முதல் ஏப்.17 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை - மொரிஷியஸ் இடையே விமான சேவைகள் தொடக்கம்! - CHENNAI MAURITIUS FLIGHT SERVICE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.