சென்னை: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் நேரடியாக காவல் ஆணையரை சந்தித்து புகார் மனுக்களை அளிக்கும் குறைதீர் முகாம், காவல் திருமண மையத்தில் நடைபெற்றது.இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதேபோன்று கூடுதல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோரும் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றனர். அவற்றை சம்பந்தபட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் விசாரித்து தீர்வு காணும்படி உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டில் ஆணையரக எல்லையில் கொள்ளை, திருடு போன நகைகள் மற்றும் செல்போன் ஆகியவை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், மீட்கப்பட்ட 185 சவரன் தங்க நகைகள் ,5 கிலோ வெள்ளி மற்றும் 398 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "விசிபல் போலீஸ் என்கிற முறையில் காவலர்கள் நடந்தே ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டு முழுவதுமாக குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் வணிக வளாகங்கள், நகை கடைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தினந்தோறும் ரோந்து மற்றும் ஆய்வு பணிகளை செய்து வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய நாய்... சென்னையில் மீண்டும் பரபரப்பு! - DOG BITE INCIDENT CHENNAI