ETV Bharat / state

நெல்லையில் வெளுத்து வாங்கும் மழை.. 2 நாளில் உயர்ந்த பாபநாசம், காரையார் அணைகளின் நீர்மட்டம்! - Dams Water Level Increase In Nellai - DAMS WATER LEVEL INCREASE IN NELLAI

Main Dams Water Level Risen In Tirunelveli: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், காரையார், மணிமுத்தாறு உள்ளிட்ட பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Main Dams Water Level Risen In Tirunelveli District
அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 2:19 PM IST

திருநெல்வேலி: வங்கக்கடலில் புயல் உருவான சூழலில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குமரி கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நீடிக்கிறது.

இதற்கிடையில் புயல் உருவானதால் நேற்று முன்தினம் (மே 23) முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை நெல்லையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. அந்தவகையில் பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு: இன்று (மே 25) காலை ஏழு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நாலுமுக்கில் அதிகபட்சம் 72 மி.மீ, ஊத்து பகுதியில் 67 மி.மீ, காக்காச்சியில் 47 மி.மீ, மாஞ்சோலையில் 26 மி.மீ என மழையின் அளவு பதிவாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் முழுவதும் சராசரியாக 494.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் அருகே காரையாறு அணை மணிமுத்தாறு போன்ற அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

அணைகளின் நீர்வரத்து: கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 500 கன அடிக்கு கீழே அணைகளுக்கு தண்ணீர் வந்த நிலையில், நேற்று (மே 24) பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் 52 அடியில் இருந்து 57 அடியாக அதிகரித்ததுள்ளது.

அதேபோல, காரையார் அணையில் 4,327 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் 64 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 300 கன அடியில் இருந்து 800 கன அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் சேர்வலாறு போன்ற பிற அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு: தற்போது ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தால் பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காரையாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகளை பிரதானமாககொண்டு நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் குடிநீர் பெறுகிறன.

கடந்த ஆண்டு மே மாதத்தில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 24 அடியாக குறைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு பெய்து வரும் கனமழையால் தற்போது அணைகளின் நீர்மட்டம் குறையாமல் அதிகரித்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இன்னும் ஓரிரு வாரங்களில் தென்மேற்கு பருவ மழையும் கிடைக்கும் என்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தொடர் மழையால் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தளமான மாஞ்சோலை மற்றும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதையும் படிங்க: "தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்கும் கர்நாடக அரசு" - சீமான் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.