ETV Bharat / state

கயிற்றில் சிக்கி காயம் அடைந்த புலி.. சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் விடுவிப்பு! - COIMBATORE TIGER TREATMENT - COIMBATORE TIGER TREATMENT

Coimbatore Tiger Treatment: கோவை அருகே கயிற்றில் சிக்கி காயம் அடைந்த ஆண் புலியை, 20 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்.

காயமடைந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட புகைப்படங்கள்
காயமடைந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட புகைப்படங்கள் (Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 3:20 PM IST

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி வனச்சரகம் மஞ்சம்பட்டி வனப்பகுதியில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் வயிற்றில் காயம்பட்ட நிலையில் புலி சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்ட சிறுத்தை (Credit - Etv Bharat Tamil Nadu)

இதனைத் தொடர்ந்து அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு புலியை தேடிவந்தனர். மேலும் இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில் அந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோமிராக்கள் பொருத்தப்பட்டு புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. மேலும் காயம்பட்ட புலியை பிடித்து சிகிச்சை அளிக்கும் வகையை 3க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து 20 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு 15ம் தேதி காயம்பட்ட புலி கூண்டில் சிக்கியது. இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்ப வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் புலியை சோதனை செய்ததில் காயம்பட்ட புலி ஆண் புலி என்பதும் 8 முதல் 9 வயது இருக்கும் என்பது கண்டறியப்பட்டது.

கூண்டில் இருந்த புலிக்கு மயக்க மருந்து செலுத்தி கூண்டில் வைத்தே அதன் பின் வயிற்றுப் பகுதியில் இறுக்கி இருந்த கயிற்றை அகற்றி காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து காயத்திற்கு மருந்துகள் வைக்கப்பட்டு பல மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு புலி அதே வனப்பகுதியில் விடப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "20 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் உள்ள புலிக்கு கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு அதை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. மாடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கயிறு புலியின் வயிற்று பகுதியில் இறுக்கியதால், அதன் தோல் பகுதியில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்த பிறகு மீண்டும் அதே வனப்பகுதிக்குள் விடப்பட்டது. மிகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் புலியை கண்காணிக்கவும் பிடிக்கும் பணி சவாலாக இருந்தது. இந்த பகுதிக்கு சாலை வசதி ஏதும் இல்லாததால், அனைத்தும் தலை சுமையாக கொண்டுவரப்பட்டது.

மேலும் செங்குத்தான மலைப் பாதை வழியாக அனைவரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மழை, குளிர் என பல்வேறு சில சிரமங்களுக்கு இடையே இந்த பணி வெற்றிகரமாக நடைபெற்றது. அடுத்த ஒரு மாதம் அந்த புலியை வனத்துறையினர் கண்காணிப்பார்கள்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முதுமலை சாலையில் உலா வந்த புலி; மரண பீதியில் சுற்றுலா பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.