ETV Bharat / state

“வரலாறு காணாத சீரழிவுகளும் நெருக்கடிகளும் முடிவுக்கு வரவுள்ளது” - திருப்பூர் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன்! - CPI SUBBARAYAN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 3:43 PM IST

CPI SUBBARAYAN: கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வரலாறு காணாத சீரழிவுகளும், நெருக்கடிகளும் ஓரளவிற்கு முடிவுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது என திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் வெற்றி வேட்பாளர் சுப்பராயன்
திருப்பூர் வெற்றி வேட்பாளர் சுப்பராயன் (Credit - ETVBharat TamilNadu)

திருப்பூர்: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அந்த வகையில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 4 லட்சத்து 72 ஆயிரத்து 739 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பூர் வெற்றி வேட்பாளர் சுப்பராயன் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETVBharat TamilNadu)

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அருணாசலத்தை 1 லட்சத்து 25 ஆயிரத்து 928 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த சுப்பராயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.

அவருக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், உடன் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கட்சியினர் இருந்தனர்.

சான்றிதழ் பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பராயன் பேசுகையில், “மக்களை மதமாற்ற முயன்ற மோடி அமைச்சரவையின் தாக்குதலையும், அவர்கள் கட்டமைத்த பொய்யையும் மக்கள் பொடிப்பொடி ஆக்கி விட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வரலாறு காணாத சீரழிவுகளும், நெருக்கடிகளும் ஓரளவிற்கு முடிவுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.

கருத்து திணிப்பு உண்மை இல்லை. மோடியின் உள்நோக்கத்தை பாதுகாக்க கட்டமைத்த ஒன்று என்று மக்கள் நிரூபித்து விட்டனர். இந்தியா கூட்டணி நிச்சயம் அதிகாரத்திற்கு வரும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாதவர் ஜவஹர்லால் நேரு. 17 காலம் ஆண்ட அவரால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்பை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து, ஜனநாயக அரசியல் அமைப்பை தகர்க்கின்ற வேலைகளை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது.

ஜனநாயக அரசியல் அமைப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் நாங்கள் சிலராக இருந்தோம். இன்றைக்கு சம பலத்துடன் உள்ளே செல்கிறோம். அரசியல் அமைப்புக்கு எதிராக தாண்டவமாட முடியாது. அந்த அளவு மிகுந்த பலத்தோடு மக்கள் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

நல்லதே நடக்கும் இன்னும். இரண்டு தினங்களில் முழு விவரம் வெளிப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனநாயக அரசியல் அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும். 10 ஆண்டு அரசியல் பொருளாதார சமூக வாழ்வில் இழைக்கப்பட்ட தீங்கில் இருந்து விடுவிக்க புதிய அரசு மேற்கொள்ளும்” என்றார்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: ஜவுளி நகரமான திருப்பூரை கைப்பற்றிய சிபிஐ சுப்பராயன்! - Lok Sabha Election Results 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.