ETV Bharat / state

அமைச்சருக்கு வந்த போன் கால்.. பதட்டமான தென்காசி வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார்! - Tenkasi Candidate Rani Sri Kumar - TENKASI CANDIDATE RANI SRI KUMAR

Tenkasi Candidate Rani Sri Kumar: தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால், தென்காசி வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் பதட்டமடைந்த சம்பவம் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tenkasi Candidate Rani Sri Kumar
Tenkasi Candidate Rani Sri Kumar
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 10:02 PM IST

Updated : Mar 22, 2024, 10:27 PM IST

அமைச்சருக்கு வந்த போன் கால்

தென்காசி: நாடாளுமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் சூழலில், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என விறுவிறுப்பாக தேர்தல் களம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. இந்த நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், திமுக பிரதிநிதிகள் மற்றும் திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்ட தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வருகைதர தாமதமானதன் காரணமாக, கூட்டமும் தாமதமாக தொடங்கியது. இதுமட்டுமல்லாது, அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில், கூட்டம் ஆரம்பிக்க மேலும் தாமதமானது. அதனால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தொண்டர்களிடையே மன்னிப்பு கேட்டு பேசத்தொடங்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், "விருதுநகர் மற்றும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 27ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரைக்கு வர உள்ளார். தென்காசி நாடாளுமன்ற வேட்பாளரை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

இதற்கிடையே அமைச்சருக்கு வந்த தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராணி ஸ்ரீ குமார் பதட்டமாக காணப்பட்ட நிலையில், மேடையிலும் மிகவும் பதட்டமாகவே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி! வேட்பாளரை மாற்றியது பா.ம.க. - SOWMYA ANBUMANI PMK

Last Updated : Mar 22, 2024, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.