ETV Bharat / state

“மத்திய பட்ஜெட்டில் குப்பைதான் உள்ளது!”- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம்.. - TRB Rajaa in investopia global

Minister TRB Raja in Investopia Global: மத்திய பட்ஜெட்யை நான் சாதாரண தமிழனாக பார்த்தால் அதில் வெறும் குப்பை தான் உள்ளது பெரிதாக பார்க்கும் அளவிற்கு எதுவும் இல்லை என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சித்துள்ளார்.

மேடை உரையாற்றும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் அப்துல்லா, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
மேடை உரையாற்றும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் அப்துல்லா, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 5:24 PM IST

சென்னை: CII எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பாக INVESTOPIA GLOBAL என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை அடையாறில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஐக்கிய அரபு எமிட்ரேட்ஸ் பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா, உட்பட பல ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “ துபாய்-யில் ஒரு நிகழ்வில் UAE பொருளாதர அமைச்சரை சந்தித்த போது அவரை சென்னைக்கு அழைத்து ஒரு முதலீட்டாளர் மாநாடு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இன்று இந்த மாநாடு நடைபெறுகிறது. நாளை முதலமைச்சரை UAE பொருளாதார துறை அமைச்சர் சந்தித்து பேச இருக்கிறார். முதலீடுகள் குறித்து பல பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே பல புதிய முதலீடு ஒப்பந்தகள் நடைபெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. இதில் UAE யும் சேர்ந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்னும் பிரகாசமாக இருக்கும். இதன் மூலம் மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அமைச்சர் டி.ஆர்.பி ராஜா (Credits- ETV Bharat Tamil Nadu)

பல்வேறு முதலீட்டாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்துள்ளனர். இந்த மாநாடு முழுமையாக முடிந்த பிறகு தான் இந்த மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடுகள் வர போகிறது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும். வெறுமனே இத்தோடு முடிந்து விடமால் இதனைத் தொடர்ந்தும் முதலீட்டுகள் பற்றி ஆலோசனை பேசுக்கள் நடைபெற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அதற்காக தற்போது ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்க போகும் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் சாதனங்களில் 30 சதவீதம் தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் இருந்து எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஏற்றுமதி என்பது ஆண்டுக்கு 9 பில்லியன் டாலர் என்று இருந்த இந்த நிலையில் தற்போது ஆண்டுக்கு 12 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும்.

இந்த முறை மேலும் பல புதிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் வர உள்ளது.மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி தமிழகத்தில் ஏற்பட உள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு நல்ல வருமானம் மற்றும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

மத்திய பட்ஜெட் குறித்து அமைச்சர் : மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நான் சாதாரண மனிதனாக, தமிழனாக பார்க்கிறேன், அதில் பார்க்க கூடிய அளவில் எதுவும் இல்லை, பட்ஜெட்டில் வெறும் குப்பை தான் இருக்கிறது. இந்திய நாட்டை வலிமைப்படுத்த அதிக சக்தி வாய்ந்த என்ஜினாக தமிழ்நாடு திகழ்கிறது.

தற்போது மூன்றாவது முறையாக இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரக நாட்டு உடனான இது போன்ற சந்திப்பு நடைபெறுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த காலணிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களை கொண்டுள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு இடையேயான வணிகம் தென் இந்தியாவில் இருந்து தொடங்கி உள்ளது.

மேலும், தமிழ்நாடு திறமை, அறிவின் தலைநகரமாக விளங்குகிறது. தொழில் தொடங்க தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது. வேளாண் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் தமிழகம், மதிப்பு கூட்ட பொருட்களாக மாற்றுவதில்லை” என்றார்.

இதன் பின்பு பேசிய ஐக்கிய அரபு அமீரக பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா, “நான் இந்திய மண்ணிற்கு தனிப்பட்ட முறையிலும், எங்கள் நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் துறை ரீதியாகவும் வந்துள்ளேன். இன்று காலை தமிழ்நாடு அமைச்சர் மா சுப்ரமணியன் உடன் ஹெல்த் வாக் சென்றேன்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 50 பில்லியன் டாலர்களாக இருந்த எங்களின் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பு, இந்தியாவுடனான சில ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் விளைவாக தற்போது 70 பில்லியனாக உயர்ந்துள்ளது. எண்ணெய் வர்த்தகம் இன்றி நாட்டின் GDP இல் முதல்முறையாக 74 சதவீதம் வளர்ச்சி பங்களிப்பை மற்ற தொழில் வர்த்தகம் வழங்கி உள்ளது” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் 'ஜாக்கிங்' சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.