திருப்பூர்: மார்ச் 16ஆம் தேதி மாலை 3 மணி முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக சோதனைகள் மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை என்ற கணக்கில், தமிழ்நாடு முழுவதுமாக 702 பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலே, வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் போன்றவர்கள் தங்களுக்குத் தேவையான பணத்தைக் கொண்டு செல்வது என்பது இக்கட்டான நிலையாக உள்ளது என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாது, இத்தகைய சூழ்நிலைகளில், தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கி பணத்தைப் பறிகொடுக்கிறனர் என்றும், அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை அளித்து, அதை மீட்பதற்குள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் கூறுகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், 100 ரூபாய் அதிகமாகக் கொண்டு சென்றதற்காக, அவன் கொண்டு சென்ற 50 ஆயிரத்து 100 ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் பறிகொடுத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நேரத்தில், ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்ல அனுமதி உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே தோட்டக்கலைத் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று (மார்ச் 20) வாகன சோதனையில் ஈடுபட்டபோது, 17 வயது சிறுவன் ஒருவன் 50 ஆயிரத்து 100 ரூபாய் பணம் கொண்டு சென்றதை அடுத்து, அந்த பணம் தேர்தல் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் வியப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு!