ETV Bharat / state

காதலர்களை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறிப்பு.. தஞ்சையில் நான்கு பேர் கைது..! பின்னணி என்ன? - money robbery from lovers

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 10:49 AM IST

money robbery from lovers in Thanjavur: தஞ்சை அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி, கூகுள் பே மூலம் பணம் பறித்த நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு வாலிபர்கள்
கைது செய்யப்பட்ட நான்கு வாலிபர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

திருவையாறு: தஞ்சையைச் சேர்ந்தவர் தமிழரசன் (24). இவர் நேற்று தனது காதலியுடன் அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, தஞ்சை திருவையாறு புறவழிச் சாலையில் சென்ற போது, தமிழரசனின் காதலிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது.

இதற்காக அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் தமிழரசன் மற்றும் அவரது காதலியை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

அதற்கு, தமிழரசன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் உங்கள் வீட்டில் யாரிடமாவது இருந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பு என்று மிரட்டி உள்ளனர்.

இதனால், உயிருக்கு பயந்த தமிழரசனின் காதலி தனது சகோதரியிடம் கூகுள் பே மூலம் உடனடியாக ரூபாய் 3 ஆயிரம் தமிழரசனின் செல்போனுக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பணம் தமிழரசனின் செல்போனுக்கு வந்ததும், தமிழரசனிடம் பணம் கேட்டு மிரட்டிய அந்த நபர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் அந்த 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் தமிழரசன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் காதலர்களை மிரட்டி பணம் பறித்ததாக தஞ்சையை சேர்ந்த பாபு (24), மணிகண்டன் (27), வல்லரசன் (21), சார்லஸ் (29), விக்கி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் பாபு, மணிகண்டன், வல்லரசன், சார்லஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள விக்கியை தேடி வருகின்றனர். காதல் ஜோடியை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் சுவாசப் பிரச்சனை! அச்சுறுத்தும் PM 2.5 - air pollution

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.