ETV Bharat / state

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுதலை செய்யப்பட்டது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம்! - சூமோட்டோ வழக்கு

Thangam Thennarasu case : வருமான வரித்துறை ஆவணங்கள் அடிப்படையில், வழக்கில் முகாந்திரம் இல்லாததால், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுதலை செய்யப்பட்டார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 7:13 PM IST

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான ஆட்சிக் காலத்தில், 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து சேர்த்ததாக, கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு, அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அனைத்து தரப்பிலும் பதிலளிக்கப்பட்ட நிலையில், இறுதி விசாரணை இன்று (பிப்.28) தொடங்கியது.

இதையும் படிங்க: “இடமாற்றம் செய்யும் உத்தரவை அரசு ஊழியர்கள் தண்டனையாக பார்க்கக்கூடாது” - மதுரைக்கிளை அறிவுறுத்தல்!

அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில், “அரசியல் காரணங்களுக்காகவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. வருமானவரி ஆவணங்கள் வழங்கப்பட்டதை லஞ்ச ஒழிப்புத்துறை நிராகரித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, யாரையும் குற்றவாளியாகக் கருதி தண்டிக்க முடியாது. நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என சட்டம் தெளிவாக கூறுகிறது.

அதனால், ஆவணங்களின் அடிப்படையில்தான் அமைச்சர் தென்னரசுவை ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. வழக்கில் குற்ற முகாந்திரம் இருப்பதாக கருதினால், விசாரணையை தொடர சம்பந்தப்பட்ட நீதிமன்றம் உத்தரவிடலாம். முகாந்திரம் இல்லாததால், வழக்கிலிருந்து அமைச்சரை விடுவித்தது என தெரிவிக்கப்பட்டது” தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் விளக்கமளிக்க வழக்கை நாளை (பிப் 29) ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: திமுக இருக்காது எனக் கூறிய பலர் காணாமல் போயுள்ளனர்.. பிரதமருக்கு கனிமொழி பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.