ETV Bharat / state

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாணவியை நேரில் அழைத்து வாழ்த்திய ஆட்சியர்! - Tenkasi collector - TENKASI COLLECTOR

Tenkasi Collector greetings to upsc exam clear girl: தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த மாணவி இன்பா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாணவியை நேரில் அழைத்து பூங்கொத்து கொடுத்து பாராட்டியதுடன், தேநீர் விருந்து அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Tenkasi Collector greetings to upsc exam clear girl

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 1:49 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாணவி இன்பா. இவர் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், செங்கோட்டை அரசு நூலகத்தில் படித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

தற்போது, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து தென்காசி மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ள மாணவி இன்பாவிற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடுத்தர குடும்பத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வை எழுதி வெற்றி பெற்ற இன்பாவை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது, மாணவி இன்பாவிற்கு பூங்கொத்து வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததுடன், அவருக்கு தேனீர் விருந்தும் அளித்துள்ளார். மேலும், இதேபோன்று கிராமப்புற மாணவர்களும் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் கொடுத்த புதிய அப்டேட்.. இனிமேல் நோட்ஸ், பின் உள்ளிட்ட வசதிகள்! - Whatsapp Update

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.