ETV Bharat / state

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு.. நில உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

5 year old girl fell into a borewell and died: திருவண்ணாமலை மாவட்டத்தில், மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி விழுந்து இறந்த சம்பவத்தில் நில உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஆரணி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

5 year old girl fell into a borewell and died in tiruvannamalai
தி.மலையில் ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி விழுந்து பலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 4:10 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனி - மலர் கொடி தம்பதியினர். இந்த தம்பதியினர் தேவி (5) என்ற தனது மகளுடன் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். இதில், பழனி கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு மலர் கொடி, புலவன் பாடி கிராமத்தில் உள்ள நிலத்தில் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, தனது குழந்தையான தேவியை உடன் அழைத்துச் சென்றுள்ளார். மலர் கொடி விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, சிறுமி அருகில் உள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் விவசாய நிலத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார்.

பின்னர், மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புத் துறை ஆகியோர் நேரில் வந்து, 2 நாட்கள் போராடி சிறுமியை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக ஆரணி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா, விவசாயி சங்கர் என்பவருக்கு 10 ஆண்டு தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, களம்பூர் போலீசார் விவசாயி சங்கரை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் விஜயராகவன் கைது ; கோவை போலீசார் அதிரடி நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.