ETV Bharat / state

நாட்டின் அடுத்த பிரதமரை கணித்ததா நந்தி அவதாரம்? - கோவை சிறப்பு பூஜையில் நடந்தது என்ன? - Bull signaled who is next PM

Nandi Avatar Bull Signaled Who is Next PM: இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடி வருவார் என நந்தி அவதாரமான காளை மாடு சைகை மூலம் குறி சொன்னதாக கோயில் பூசாரி தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி மற்றும் கோயிலில் நந்தி அவதார காளைக்கு பூஜை செய்யும் படம்
மோடி மற்றும் கோயிலில் காளைக்கு பூஜை செய்யும் படம் (Photo Credit : ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 11:22 AM IST

கோயில் பூசாரி கோபால்சாமி பேட்டி (Video Credit ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் குமாரசாமி அடிகளாரின் 48ஆம் நாள் நிறைவு வழிபாடு (ஜீவசமாதி வழிபாடு) நடைபெற்றது. அப்போது கோயில் பூசாரி, மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என நந்தி அவதாரமாக உள்ள மாடு சைகை மூலம் குறி சொன்னதாக தெரிவித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

அதாவது, பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் அமைந்துள்ளது நந்திவனநாதர் பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலை அமைத்து வழிபாடுகள் நடத்தி வந்த பேரூர் மடத்தின் தொண்டர், நாகலிங்கேஸ்வரி சித்தர் பீட குமாரசாமி அடிகளார் கடந்த 48 நாட்களுக்கு முன்பு இக்கோயில் வளாகத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

இந்த நிலையில் குமாரசாமி அடிகளாரின் 48ஆம் நாள் நிறைவு வழிபாடு (ஜீவசமாதி வழிபாடு) கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அதில், வேள்வி வழிபாடு, அபிஷேகம் அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு, தொடர்ந்து மகேசுவர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி குறித்து பேசிய கோயில் பூசாரி கோபால்சாமி, "இந்த கோயிலில் அன்னை பராசக்தி பத்ரகாளியம்மன் என்ற நாமத்தோடு நின்ற கோலத்தில் மூன்று சிரசுகளோடும் ஓர் உடலுமாக காட்சி அளிக்கிறார். இங்கு பரிவார மூர்த்திகளாக சிவபெருமான், கணபதி, கருப்பணசாமி ஆகியோர் உள்ளனர். மேலும், இக்கோயில் நாயகனாக விளங்கும் நந்தி தேவருக்கு ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் சிறப்பாக பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

இந்த கோயிலுக்கு மூன்று முறை சிவனடியார் கோலத்தில் சிவன் காட்சியளித்துள்ளார். மேலும் அவருக்கு பிடித்த வாகனம் காளை மாடுக்கு 'சிவா' எனப் பெயரிட்டு இங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த மாட்டின் அடுத்த பகுதியில் சிவன் முத்திரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பதிந்துள்ளது. பக்தர்களுக்கு பிரதோஷம் தினத்தன்று தனது முன்னகால் ஆசிர்வாதம் செய்கிறது. பக்தர்கள் மனதில் நினைந்த காரியம் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.

இந்த நிலையில், பாரதம் குறித்து நந்தி அவதாரத்திடம் கேட்ட போது, பாரத பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்கள் என நந்தி குறி சொல்லியுள்ளது. அதற்கு ஏற்ப சன்னியாசி வேடத்தில் வந்த ஒருவரும், நந்தி தேவரிடம் என்ன அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டார். மேலும், பிரதமர் மோடி சிவத் தொண்டு செய்வதற்காகவே மீண்டும் மனிதராகப் பிறந்திருக்கிறார். ஆகையால், மோடியே மீண்டும் பிரதமராக வரப்போகிறார், அதில் எந்த கவலையும் இல்லை எனக் கூறிவிட்டு மறைந்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்கு: ஒருநாள் போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.