ETV Bharat / state

நிதி வழங்காமல் பிடிவாதமாக உள்ள மத்திய அரசு.. போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்!

பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்காமல் வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 12:56 PM IST

சென்னை: அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்திற்குரிய நிதியினை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்பதால் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஆகையால், இன்று மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் இயக்கங்கள் அறிவித்திருந்தன.

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அமைச்சு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறும்போது, "சமக்ர சிக்ஷ்சா அபியான் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு இந்த ஆண்டு ஒன்றிய அரசின் சார்பாக வழங்க வேண்டிய சுமார் ரூ.2,165 கோடி இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் செயல்பாடுகள் 60 சதவீதம் ஒன்றிய அரசின் நிதி மூலமாகவும், 40 சதவீதம் மாநில அரசின் நிதி மூலமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அமையப் பெற்றுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையொப்பம் இடவில்லை என்பதால், இந்த ஆண்டுக்கான ஒன்றிய அரசு நிதியை வழங்க முடியாது என்று பிடிவாதமாக உள்ளது.

இதையும் படிங்க: பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இதனால், தற்பொழுது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றக் கூடிய சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் ஊதியம் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதி இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. மேலும், மாநில அரசின் நிதி பங்கீடான 40 சதவீதத்திலிருந்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகள் நடைபெற்று வந்த சூழலில் செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.

இதுவரையில் 2024 செம்பம்பர் மாதம் ஊதியம் பெறாமல் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் நிதி வருவாயில் முதன்மை இடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

தமிழக கல்வித்துறையைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கும் சூழலில் கல்வித் துறையின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் செயல்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது.
கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி சென்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து சமக்ர சிக்ஷ்சா அபியான் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்துள்ளார்.

இருப்பினும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாதது அந்தத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுனர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்டோரிடையே மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காமல் தமிழ்நாட்டு மாணவர்களையும், ஆசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்களையும் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், விரைவில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி ரூ.2,165 கோடியை விரைவில் வழங்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வரும் அக்.9ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடத்திட திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர் சங்கங்களை சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்க உள்ளனர்.

மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் கு.வெங்கடேசன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, முக்குலத்தோர் புலிப்படை தலைவார் கருணாஸ், திமுக துணைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.