ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: திருப்பூரை திரும்பவும் கைப்பற்றுமா இந்தியா கூட்டணி? அடிச்சுத் தூக்குமா அதிமுக? - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

திருப்பூர்  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 12:22 PM IST

திருப்பூர்: கொங்கு மண்டலத்தின் முக்கிய தொழில் நகரமாக திருப்பூர் அறியப்படுகிறது. பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமக்கென தனி இடத்தை பெற்றுள்ள திருப்பூர், பல்லாயிரக்கணக்கான வெளிமாவட்டத்தினர் மற்றும் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இடமாக திகழ்கிறது. இதன் காரணமாக திருப்பூர் மக்களவைத் தொகுதியும் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தொகுதியாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருப்பூர் தொகுதி 18 தொகுதியாக உள்ளது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என்ற இரண்டு சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் அமைந்துள்ளன. இத்தொகுதி, 2009க்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்ட பின்னர் மூன்று மக்களவை பொதுத் தேர்தலை சந்தித்துள்ள இத்தொகுதியில், அதிமுக இரண்டு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கவனம் பெற்ற நோட்டா: 2009 மர்றும் 2014 ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், 2019ல் நடைபெற்ற தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், ஆறு வேட்பாளர்கள் சுயேச்சையாகவும் என மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் திமுக கூட்டணி கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 5,00,825 வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தன் 4,15, 357 வாக்குகளும் பெற்றனர். இவர்களுக்கு அடுத்ததாக, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த சந்திரகுமார் 64 ,657 வாக்குகளும், அமமுக சார்பில் போட்டியிட்ட செல்வம் 43, 816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஜெகநாதன் 42,189 வாக்குகளும் வாங்கியிருந்தனர். நோட்டாவுக்கு 21,861 வாக்குகள் விழுந்திருந்தது. இத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 93,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2024 இல் வாக்குப்பதிவு எவ்வளவு?: திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,86,475, பெண் வாக்காளர்கள் 8,11,718, மூன்றாம் பாலினத்தவர் 250 என மொத்தம் 15,98,443 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 9,72,082 பேர் தங்கள் வாக்கினைப் பதிவு செய்த நிலையில், மொத்த வாக்குப்பதிவு 70.62 சதவீதமாகும். முன்னதாக, 2019ல் 73.21 சதவீதம் வாக்கு பதிவாகியது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே உள்ளது.

கள நிலவரம் என்ன?: திருப்பூர் தொகுதியில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் கே.சுப்பராயன், அதிமுக சார்பில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் அருணாச்சலம், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்களில், கடந்தமுறை வெற்றிபெற்ற வேட்பாளர் கே.சுப்பராயன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் அருணாச்சலம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. அதேசமயம், பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தத்திற்கு ஓரளவு வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

சாதகமான அம்சங்கள்: இந்த தொகுதியைப் பொருத்தவரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும், திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகள் அதிக அளவில் பின்னலாடைத் தொழிலில் சரிவைச் சந்தித்திருக்கின்றன. மேலும், அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், திருப்பூர் தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் ஈரோடு மாவட்டத்துக்குள் இருப்பது இவருக்கு சாதகமாக இருக்கிறது.

தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு?: திருப்பூர் தொகுதியை பொறுத்தவரையில் பிரச்சாரத்தில் பெரும்பாலும் ஈரோடு மாவட்ட எல்லைக்குள் வரக்கூடிய பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை பகுதிகளில் தான் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் திருப்பூர் தொழில்துறையினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததுடன், தான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொழில் துறைக்கான மின்கட்டணம், ஜிஎஸ்டி, நூல்விலை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.

சிட்டிங் எம்.பி. சுப்பராயன், தங்களது பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குறை தொழில்துறையினரிடம் இருக்கிறது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணியினர் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்துடன் பிரச்சார களத்தில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இத்தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா? அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக அமையுமா? ஆகிய கேள்விகளுக்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளான ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: மாற்றத்தை எதிர்நோக்குகிறதா கடலூர் தொகுதி? வெற்றி யார் பக்கம்? - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.