ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: திமுக vs அதிமுக vs பாஜக; மும்முனைப் போட்டியில் கிருஷ்ணகிரியை கைப்பற்ற போவது யார்? - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 4:43 PM IST

கிருஷ்ணகிரி: கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி நாடளுமன்ற தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகள் பேசும் மக்களும் கணிசமாக வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் மாம்பழம் விளைச்சலில் முன்னணி வகிக்கும் தொகுதிகளில் முதலிடம் வகிப்பது இந்த தொகுதிதான்.

மேலும் மாநிலத்தின் முதல் மாநகராட்சியான ஓசூர் இம்மாவட்டத்தில்தான் உள்ளது. இது குண்டூசி முதல் விமான உதிரிப்பாகங்கள் வரை பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்பேட்டைகளின் கோட்டையாக விளங்குகிறது.

கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரி ஆறு பாயும் முதல் மாவட்டமாகவும், தென்பெண்ணை ஆறு பயணம் தொடங்கும் மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், தளி, ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் கோட்டை: தமிழகத்தில் கடந்த காலங்களில் காங்கிரஸ் வலிமையாக இருந்த தொகுதிகளில் கிருஷ்ணகிரியும் ஒன்று. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி இதுவரை 17 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 18வது தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இவற்றில் காங்கிரஸ் - 8 முறையும், திமுக - 5, அதிமுக - 3, தமாகா - 1 முறை என வெற்றி பெற்றுள்ளன.

காங்கிரஸ் vs திமுக: 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 75.19% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் 6,11,298 (52.64%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி 4,54,533 (39.14) வாக்குகள் பெற்று 1,56,765 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சியின் மதுசூதனன் - 28,000, வாக்குகளும், மநீம ஸ்ரீகாருண்யா 16,995 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.

தேசிய கட்சிகளின் ஆதிக்கம்: தேசிய கட்சிகளின் ஆதிக்கம்மிக்க இந்த தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை ( 2001,2006,2011) ஒசூர் எம்.ஏல்.ஏ வாக இருந்த கோபிநாத் களமிறங்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஓசூர் மாநகர மண்டலக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் போட்டியிட்டுள்ளார்.

பஸ் டிரான்ஸ்போர்ட், கிரானைட் தொழிற்சாலை என தொழிலதிபரான இவர், மாவட்டம் முழுவதும் அறியப்படும் நபராக வளம் வருகிறார். பாஜக சார்பில் முன்னாள் எம்பி நரசிம்மன் போட்டியிட்டுள்ளார்.

இவர் பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் என முக்கியப் பொறுப்பு வகிப்பதாலும், முன்னாள் எம்பி என்பதாலும் பாஜக தலைமை இவரை களமிறக்கி உள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரப்பனின் மூத்தமகள் வித்யாராணி போட்டியிடுகிறார். இவர்களுடன் மொத்தம் 27 பேர் போட்டியிடுகின்றனர்.

குறைந்த வாக்கு சதவீதம்: இந்த தொகுதியில் 8,14,076 ஆண் வாக்காளர்கள், 8,08,798 பெண் வாக்காளர்கள், 305 இதர வாக்காளர்கள் என மொத்தம் 16,23,179 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 71.50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆண்கள் 5,87,007, பெண்கள் 5,73,412, இதர வாக்காளர்கள் 79 போ் என மொத்தம் 11,60,498 போ் வாக்களித்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 3.69 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளது.

நான்கு மொழிகளில் பேசி அசத்திய வேட்பாளர்: கடந்த தேர்தலைபோல் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவின் இரண்டு எம்.ஏல்.ஏக்களான பிரகாஷ் மற்றும் மதியழகன் இவர்களுடன் சிபிஐ மாவட்டச் செயலாளர் தளி இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து, தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர் ஜெயபிரகாஷ் உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் பேசி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதேபோல் பாஜக, நாதக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வாக்கும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மும்முனை போட்டி: கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் 27 பேர் களத்தில் நின்றாலும் காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் இந்த தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் மும்முனை போட்டி... கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்ற போவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.