ETV Bharat / state

குவைத் தீ விபத்து: உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! - Kuwait Fire accident - KUWAIT FIRE ACCIDENT

Kuwait Fire Accident: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் இன்று அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குவைத் தீ விபத்து மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை புகைப்படம்
குவைத் தீ விபத்து மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 7:30 AM IST

சென்னை: குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் இந்தியர்கள் பங்குதாரர்களாக உள்ள என்பிடிசி குழுமத்துக்குச் சொந்தமான குடியிருப்புக் கட்டடம் ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் இந்தியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 12) காலை சுமார் 4 மணிக்கு மேல் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தின் தரைதளத்தில் தீ பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அந்த தீ மளமளவெனப் பரவி தீ விபத்தாக மாறியுள்ளது. அது காலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கட்டடம் முழுவதும் தீயின் புகைப் பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அனைவருக்கும் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, கட்டடத்தில் குடியிருந்தவர்கள் தப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால், வெளியே வர முடியாமல் பலரும் தீ விபத்தில் பலியாகினர். அதாவது, 45 இந்தியர்கள் உட்பட 49 பேர் தீ விபத்தில் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களில் 7 பேர் தமிழர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்ற இந்திய தூதரக அதிகாரிகள் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறது.

அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் இன்று கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வர இருக்கிறது. இறந்தவர்களின் உடல்களைப் பெறுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் கொச்சி சென்று உடல்களை பெற்றுக் கொண்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

அதையடுத்து, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், விழுப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப், கடலூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை ஆகியோரது உடல் மட்டும் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சியைச் சேர்ந்த எபமேசன் ராஜு, தஞ்சாவூரைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு ஆகியோரது உடல்கள் அவர்களின் மாவட்டம் அருகே உள்ள விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது என தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குவைத் தீ விபத்து; உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.