ETV Bharat / state

"16 ஆண்டுகளாக தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்கு முறை" - சாம்சங் விவகாரத்தில் திருமாவளவன் காட்டம் - SAMSUNG EMPLOYEES PROTEST

காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையின் ஊழியர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர் நேரில் சந்தித்து ஊழியர்களிடம் ஆதரவை தெரிவித்தனர்.

சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக பேட்டியளிக்கும் திமுக கூட்டணிகள் கட்சிகள்
சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக பேட்டியளிக்கும் திமுக கூட்டணிகள் கட்சிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 10:34 PM IST

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சிஐடியு தொழிற்சங்கம் அமைத்தல், ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 31 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனுமதியில்லா போராட்டமும் கைது நடவடிக்கையும்: இந்த நிலையில் 31வது நாளான இன்று சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போலீசாரின் அனுமதியின்றி தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 617 தொழிலாளர்களையும், சிஐடியு தொழிற்சங்க மாநில செயலாளர் சௌந்தரராஜன், மாவட்டத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து, சுங்குவாசத்திரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

ஊழியர்களை சந்தித்து ஆதரவளித்த தலைவர்கள்: இதையடுத்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்க பாலு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமத் உள்ளிட்டோர் நேரில் சென்று அவர்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் கூறுகையில், "போராடி வரும் தொழிலாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் நிர்வாகத்தில் எடுபிடியாக இருக்கும் நபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக அறிவிப்பது ஒரு நல்ல ஜனநாயகம் இல்லை.

தொழிலாளர்களுடன் விரோதப் போக்கை கடைப்பிடிப்பது ஆரோக்யமானது இல்லை. இந்த அரசிற்கு இது நல்ல பெயரை ஈட்டி தராது. எனவே முதலமைச்சரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்துகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: அமைச்சர் வருகைக்காக ஒத்திவைக்கப்பட்ட விழா; போராட்டத்தில் இறங்கிய பள்ளி மாணவர்களின் பெற்றோர்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், "போராடிவரும் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கினை காவல்துறை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்கள் சங்கத்தில் பதிவு செய்வதில் என்ன தயக்கம் உள்ளது அரசுக்கும், அதிகாரிகளுக்கும். 16 ஆண்டுகளாக இந்த தொழிற்சாலையில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்கு முறையாகும். நாங்கள் தொழிற்சாலைகளுக்கு எதிராக இல்லை தொழிலாளர்களை சுரண்டுவதற்கு எதிராக இருக்கிறோம்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்: இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், "ஒரு நிறுவனத்தை அழித்து விட வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை, அதே வேளையில் 1500 நபர்கள் பணிபுரியும் ஒரு தொழிற்சாலையில் தங்களுக்கு ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்வதற்கு உரிமை உள்ளது.

தொழிற்சாலை ஒரு நல்ல அணுகுமுறையை வைத்திருந்தால் இன்றும் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கு முன் வந்திருக்க மாட்டார்கள். தற்போது உள்ள சூழலில் தங்களை தற்காத்துக் கொள்ள, பாதுகாத்துக் கொள்ள, சங்கத்தை அமைக்க முயல்கின்றனர். எனவே முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி நல்ல தீர்வை தர வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு: இது குறித்து பேசிய தங்க பாலு, "தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவை எடுத்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அவரை சந்தித்து நாங்கள் வலியுறுத்த உள்ளோம் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்” என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமத்: இது குறித்து பேசிய அப்துல் சமத், "தொழில் வளர்ச்சிக்கு முக்கியம் அதற்கு தொழிலாளர்களின் உரிமை முக்கியம். தமிழகத்திற்கு முதலீட்டுகளை வரவேற்கிறோம். அதே நேரம் தொழிலாளர்கள் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.