ETV Bharat / state

காலமுறை ஓய்வூதியம் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்! - Panchayat secretaries demonstration

Panchayat secretaries demonstration: சிறப்பு காலமுறை ஊதியம் திருத்தப்பட்டதை தொடர்ந்து காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 4:48 PM IST

Updated : Aug 21, 2024, 8:40 PM IST

கரூர்: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் 12,525 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கரூர் மாவட்ட தலைவர் வி.பாலுசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் வி.பாலுசாமி (Credits- ETV Bharat Tamil Nadu)

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கினார். மேலும், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் வளர்மதி, மாநில செயற்குழு உறுப்பினர் நேசமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். கரூர் மாவட்டச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 157 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் பாலுசாமி கூறுகையில், “தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் சிறப்பு கால முறை ஊதியத்தின் கீழ் சம்பளம் பெற்று வந்தனர். அதன் பின்னர் கோரிக்கைகளை ஏற்று அரசு காலமுறை ஊதியம் வழங்கி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்நிலையில், மற்ற துறைகளில் உள்ள கால முறை ஊதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஊழியர்களைப் போல ஊராட்சி செயலாளர்களுக்கும் பணி ஓய்வு பெறும் பொழுது ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முதல் கட்டமாக இன்று தமிழக அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதி இரண்டாவது கட்டமாக மாநில அளவிலான பெருந்துறை முறையிட்டு இயக்கம், சென்னை சைதாப்பேட்டை ஊரக வளர்ச்சித்துறை தலைமையகம் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்களின் பணி சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கி உள்ள ஓய்வூதிய திட்ட பலன்களை அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தூத்துக்குடி எம்பி கனிமொழியை முற்றுகையிட்ட தருவைகுளம் கிராம மக்கள்.. காரணம் என்ன?

Last Updated : Aug 21, 2024, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.