ETV Bharat / state

தென்காசி தம்பதியருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர்! - Tenkasi Train Accident Avoided

TN CM Reward to Tenkasi Couple: ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்து, ரூ.5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tamil Nadu Chief Minister Reward To Tenkasi Couple
தென்காசி தம்பதியருக்கு ரூ 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 3:55 PM IST

சென்னை: தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள தென்காசி மாவட்டம் எஸ் வளைவுப் பகுதி அருகே நள்ளிரவு நேரத்தில் கேரளாவிலிருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் எஸ் வளைவுப் பகுதியில் சுமார் 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சூழலில், அதே நேரத்தில் நெல்லையிலிருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்த புளியரை பகுதியைச் சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மனைவி வடக்குத்திம்மாள் என்ற வயதான தம்பதியர் எப்படியாவது ரயிலை நிறுத்தி விட வேண்டும் என ஓடிச் சென்று, டார்ச் லைட் மூலமாக சிக்னல் காண்பித்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதனால் மிகப்பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் லாரி முழுவதும் சேதமடைந்த நிலையில், லாரின் ஓட்டுநரான முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், உடனடியாக புளியரை சோதனைச் சாவடியிலிருந்து புளியரை போலீசாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புளியரை போலீசார், தென்காசி ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், "தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீர தீரச் செயலுக்குப் பாராட்டுகள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்

இதுமட்டும் அல்லாது, தம்பதியினரின் வீர தீரச் செயலைப் பாராட்டி, அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதையும் படிங்க: மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி மறுப்பு! அசுத்தமான ஆடை காரணமா? மெட்ரோ நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.