ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் விவரம்! - தமிழ்நாடு பட்ஜெட்

Tamil Nadu Budget 2024
சட்டப்பேரவை பட்ஜெட் 2024
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 9:23 AM IST

Updated : Feb 19, 2024, 3:12 PM IST

15:12 February 19

மாணவர்களுக்கும் ரூ.1000 திட்டம்!

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000; 2024 - 2025 நிதியாண்டிற்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு

13:29 February 19

மத்திய அரசு நிறுவன போட்டித் தேர்வுக்கு பயிற்சி!

மத்திய அரசு நிறுவனங்களில் போட்டித் தேர்வுகளில் குறைந்து வரும் தமிழக மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க ஆயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உண்டு உறைவிட பயிற்சி வழங்கப்பட உள்ளது என நிதித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

13:18 February 19

வறுமை ஒழிப்பு - பல்வேறு நலத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் 2.2 சதவீதம் மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர்.

13:16 February 19

ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வு குறைந்து கொண்டே வருகிறது

ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதிப்பகிர்வு 6.64 விழுக்காட்டிலிருந்து , 4.08 சதவீமாக குறைந்துள்ளது - நிதித்துறை செயலர்

13:13 February 19

சிக்கலில் வரி வருவாய்

இயற்கைப் பேரிடர்களால் வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தென் மாவட்டங்கள் பாதிப்பால் வருவாய்க் குறைவு ஏற்பட்டது. நிதித்துறை செயலர் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்.

11:35 February 19

கோயில் குடமுழுக்குக்கு ரூ.100 கோடி

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயிலுக்கு திருக்குடமுழுக்கு செய்வதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது:அமைச்சர்

11:30 February 19

தஞ்சாவூரில் ரூ.120 கோடியில் சிப்காட்!

தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

11:25 February 19

கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

11:19 February 19

NEO டைடல் பார்க்!

தஞ்சாவூர், சேலம், திருப்பூர்,வேலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் NEO டைட்டில் பார்க் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

11:11 February 19

3 மாவட்டங்களில் தோழி விடுதிகள்

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களிலும், ரூ.26 கோடி மதிப்பீட்டில் மூன்று தோழி விடுதிகள் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

11:07 February 19

மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.13,720 கோடி

மகளிர் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

11:05 February 19

கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அரங்கம்

கீழடியில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

11:02 February 19

ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு; ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

10:53 February 19

கோவையில் ரூ.1100 கோடியில் ஐடி பார்க்

கோவையில் ரூ.1100 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

10:49 February 19

ரூ.35,000 கோடியில் 10,000 சுய உதவிக் குழு

10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க ரூ.35,000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

10:49 February 19

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து கல்வி உதவி செலவுகளையும் அரசே ஏற்கும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

10:42 February 19

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் புதுமைப்பெண் திட்டம்

புதுமைப் பெண் திட்டம் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தபடும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

10:42 February 19

மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு ரூ.3.050 கோடி

மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு ரூ.3,050 கோடி நிதி ஒதுக்கீடு

10:38 February 19

வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1000 கோடி

வடசென்னையில் புதிய குடியிருப்புகள், தொழிற்பயிற்சி மையங்கள், திறன்மிகு பள்ளிகள், மருத்துவமனைகள், ஏரிகள் சீரமைப்பு உள்ளிட்டவைகள் அமைக்க ரு.1000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

10:35 February 19

மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.13,720 கோடி

பெண்களின் வளர்ச்சிக்காக தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகைக்கு இந்த ஆண்டு ரூ.13,720 ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

10:34 February 19

வறுமையை ஒழிக்க தாயுமானவன் திட்டம்

5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு:அமைச்சர் தங்கம் தென்னரசு

10:32 February 19

சிங்காரச் சென்னை 2.0 திட்டங்கள்

1.சிங்காரச் சென்னை 2.O திட்டத்திற்கு ரூ.500 கோடி

2.சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

3.சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

4.வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு

5.பெசன்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

10:31 February 19

தமிழ் இணைய மின் கல்விக்கு ரூ.2 கோடி

தமிழ் இணைய வழி மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் தெங்கம் தென்னரசு

10:29 February 19

வடசென்னையில் கழிவுநீரை அகற்ற ரூ.946 கோடி

வடசென்னையில் கழிவுநீர் அகற்றம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.946 செலவில் புதிய திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

10:27 February 19

இலவச மின்சாரத்திற்கு ரூ.500 கோடி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

10:23 February 19

கிராமச் சாலைகளுக்கு ரூ.1000 கோடி

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

10:22 February 19

கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு ரூ.3,500 கோடி

கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு; அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்ட ஒரு வீட்டிற்கு ரூ.3.5 இலட்சம் வழங்கப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

10:20 February 19

கணித்தமிழ் மேம்பாடு

மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி

10:16 February 19

கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு ரூ.5 கோடி

2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

10:11 February 19

தலைசிறந்த நூல்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

உலக மொழிகளில் மொழி பெயர்த்த தலைசிறந்த நூல்களை முன்னணி கல்வி நிலையங்களில் இடம்பெற செய்ய 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

10:07 February 19

காலை உணவு திட்டம் தந்த திமுக

காலை உணவு திட்டம் 2023-24 ஆண்டு திட்டத்தில் 7,000 கோடி ஒதுக்கீடு செய்திருந்ததாக பெருமிதம்

10:04 February 19

பட்ஜெட் 2024 கூட்டம் தொடங்கியது.. அமைச்சர் தங்கம் தென்னரசு உரை

2024-25 ஆ ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.

10:01 February 19

மகளிர் நலனுக்காக புதிய அறிவிப்புகள்?

கடந்தாண்டு பட்ஜெட்டில் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவது, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் இடம்பெற்ற நிலையில், இந்தாண்டும் மகளிர் நலனை மேம்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

09:57 February 19

பள்ளி கல்லூரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா?

இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு கூடுதல் நிதி உதவிகள், சலுகைகள் மற்றும் போக்குவரத்து துறையின் கீழ் சாலை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு, சுகாதரத்துறையில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

09:40 February 19

நாடாளுமன்ற தேர்தலையொட்டி முக்கிய அறிவிப்பு?

ஓரிரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றையை பட்ஜெட்டில் சிறு, குறு வணிகர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

09:39 February 19

அமைச்சர்கள், உறுப்பினர்கள் சட்டப்பேரவை வருகை

காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

09:37 February 19

மு.க.ஸ்டாலின் அரசின் 4-ஆவது பட்ஜெட்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 4-ஆவது மற்றும் நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்

09:28 February 19

காத்திருக்கும் பட்ஜெட் அறிவிப்புகள்..

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளில் 7 முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

09:25 February 19

'தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி'

'தடைகளை தாண்டி வளர்சியை நோக்கி' என்ற தலைப்பின் கீழ் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது

09:15 February 19

தமிழ்நாடு அரசின் நிதிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

Last Updated : Feb 19, 2024, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.